×

பரபரப்பான ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து வெற்றி – பென் ஸ்டோக்ஸின் லைஃப் டைம் இன்னிங்ஸ் !

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய மூன்றாவது டெஸ்ட்டில் முதலில் பேட் செய்த ஆஸி 179 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து 67 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 112 ரன்கள் பின்தங்கியது. அதையடுத்து
 
பரபரப்பான ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து வெற்றி – பென் ஸ்டோக்ஸின் லைஃப் டைம் இன்னிங்ஸ் !

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய மூன்றாவது டெஸ்ட்டில் முதலில் பேட் செய்த ஆஸி 179 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து 67 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 112 ரன்கள் பின்தங்கியது.

அதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸி 246 ரன்கள் சேர்தத்து. இதன் மூலம் இங்கிலாந்துக்கு 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது. அந்த அணியின் ஜோ ரூட் , டென்லி ஆகியோரின் அரைசதம் இலக்கைத் துரத்த உதவியது. ஆனால் ஒரு கட்டத்தில் அனைத்து பேட்ஸ்மேன்களும் அவுட் ஆகி வெளியேற அந்த அணியின் அல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மட்டும் நிலைத்து நின்று ஆடினார். 286 ரன்களுக்கு 9 விக்கெட்கள் என்றிருந்த போது அந்த அணி வெற்றி வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்ட நிலையில், அனைவரும் ஆச்சர்யப்படும் விதமாக பென் ஸ்டோக்ஸ் அதிரடியில் இறங்கி வெளுக்க ஆரம்பித்தார்.

மற்றொரு முனையில் இருந்த ஜாக் லீச்சுக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் தானே அனைத்து பந்துகளையும் சந்தித்த ஸ்டோக்ஸ் பரபரப்பான இறுதி நிமிடத்தில் பவுண்டரி அடித்து இங்கிலாந்தை வெற்றிப் பெற வைத்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஸ்டோக்ஸ் 135 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரை சமன் செய்துள்ளது இங்கிலாந்து.

From around the web

Trending Videos

Tamilnadu News