×

மூன்றே நாளில் முடிந்த முதல் டெஸ்ட் – இரண்டு நாள் லீவ் எடுத்துக்கொண்ட இந்தியா !

இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மூன்றாவது நாளிலேயே முடிந்துள்ளது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக நேற்று முன்தினம் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணித் தலைவர் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் இந்தியா மயங்க் அகர்வாலின் இரட்டை சதத்தால் 493 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து இன்று
 
மூன்றே நாளில் முடிந்த முதல் டெஸ்ட் – இரண்டு நாள் லீவ் எடுத்துக்கொண்ட இந்தியா !

இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மூன்றாவது நாளிலேயே முடிந்துள்ளது.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக நேற்று முன்தினம் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணித் தலைவர் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் இந்தியா மயங்க் அகர்வாலின் இரட்டை சதத்தால் 493 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸைப் போலவே இந்திய பவுலர்களிடம் சரண் அடைந்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் பெவிலியனில் இருந்து மைதானத்துக்கும், மைதானத்தில் இருந்து பெவிலியனுக்குமாக அணிவகுப்பு நடத்திக் கொண்டிருந்தனர். முஷ்புகீர் ரஹீம் மட்டும் அரைசதம் அடித்து ஓரளவு தாக்குப்பிடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க 213 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்களில் இமாலய வெற்றி பெற்றது. இந்திய அணித் தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்களும் அஸ்வின் 3 விக்கெட்களும் உமேஷ் யாதவ் 2 விக்கெட்களும் இஷாந்த் ஷர்மா 1 விக்கெட்டும் கைப்பற்றினர். இதன் மூலம் இந்தியா மூன்றாவது நாளிலேயே போட்டியை வெற்றியோடு முடித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News