×

ஆஷஸ் நான்காவது டெஸ்ட் – வெற்றிபெற்று கோப்பையை நாட்டுக்குக் கொண்டு செல்லும் ஆஸ்திரேலியா !

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் நான்காவது டெஸ்ட்டில் ஆஸி 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் நான்காவது போட்டி ஓல்டு ட்ரஃபோர்டு ஸ்டேடியத்தில் செப்டம்பர் 4 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் 497 ரன்கள் சேர்த்து ஆஸி வலுவான ஆதிக்கத்தை நிலை நிறுத்தியது. பின்னர் ஆடிய
 
ஆஷஸ் நான்காவது டெஸ்ட் – வெற்றிபெற்று கோப்பையை நாட்டுக்குக் கொண்டு செல்லும் ஆஸ்திரேலியா !

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் நான்காவது டெஸ்ட்டில் ஆஸி 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் நான்காவது போட்டி ஓல்டு ட்ரஃபோர்டு ஸ்டேடியத்தில் செப்டம்பர் 4 ஆம் தேதி தொடங்கியது.

இதில் முதல் இன்னிங்ஸில் 497 ரன்கள் சேர்த்து ஆஸி வலுவான ஆதிக்கத்தை நிலை நிறுத்தியது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 301 ரன்களில் ஆல் அவுட் ஆகி 196 ரன்கள் பின் தங்கியது. அதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய 186 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 386 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த அசாத்தியமான இலக்கை எட்ட முடியாத எனத் தெரிந்த போதும் இங்கிலாந்து அணி டிரா செய்ய கடுமையாகப் போராடிய போதும் 197 ரன்களை மட்டும் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் ஆஸி 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் அதில் இங்கிலாந்து வெற்றி பெற்றாலும் தொடர் ட்ரா ஆகவே வாய்ப்புள்ளதால் இந்த முறை ஆஸி அணி ஆஷஸ் கோப்பையை தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்வது உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் ஸ்டீவ் வாஹ் தலைமையிலான ஆஸி அணிக்குப் பிறகு டிம் பெய்ன் தலைமையிலான ஆஸி அணி இங்கிலாந்தில் இருந்து ஆஷஸ் கோப்பையை கொண்டு செல்ல உள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News