×

பிசிசிஐ தலைவராக கங்குலி … செயலாளராக அமித் ஷா மகன் – போட்டியின்றித் தேர்வு !

பிசிசிஐ யின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ-ல் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக விசாரித்த உச்சநீதிமன்றம், லோதா சீர்திருத்தக் குழுவினை அமைத்தது. இந்தக் குழுவின் பரிந்துரையின்படி மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கான தேர்தல் அண்மையில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து, பிசிசிஐ நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது. பிசிசிஐ பொறுப்புகளுக்கான வேட்புமனுக்கள் நேற்றோடு முடிவடைந்தது. அதில் தலைவர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மட்டுமே
 
பிசிசிஐ தலைவராக கங்குலி … செயலாளராக அமித் ஷா மகன் – போட்டியின்றித் தேர்வு !

பிசிசிஐ யின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிசிசிஐ-ல் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக விசாரித்த உச்சநீதிமன்றம், லோதா சீர்திருத்தக் குழுவினை அமைத்தது. இந்தக் குழுவின் பரிந்துரையின்படி மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கான தேர்தல் அண்மையில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து, பிசிசிஐ நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது.

பிசிசிஐ பொறுப்புகளுக்கான வேட்புமனுக்கள் நேற்றோடு முடிவடைந்தது. அதில் தலைவர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மட்டுமே வேட்புமனுத்தாக்கல் செய்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவர் ஏற்கனவே மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவராக 5 ஆண்டுகள் பதவி வகித்து விட்டதால் பிசிசிஐ தலைவராக ஒரு ஆண்டு மட்டுமே பதவி வகிக்க முடியும்.

அதேப்போல செயலாளராக அமித் ஷாவின் மகன் ஜெய ஷாவும், பொருளாளராக அனுராக் தாக்கூரின் சகோதரர் அருண் தாமலும் தேர்ந்தெடுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News