×

அம்பயர் அவுட்டு கொடு… குழந்தை போல் அழுத கிறிஸ் கெயில் – வைரல் வீடியோ

கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் அம்பயர் அவுட் கொடுக்காததால் பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் செய்த செயல் அம்பயரோடு சேர்த்து பலரையும் சிரிக்க வைத்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் தற்போது மெசான்ஸி சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. அப்போது ராக்ஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தது. ஸ்டார்ஸ் அணி சார்பாக கிறிஸ் கெயில் பந்து வீசிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் வீசிய பந்து பேட்ஸ்மேனின் காலிடுக்கில் சென்றது. அதற்கு கெயில் அம்பயரிடம் அவுட் கேட்டு அப்பீல் செய்தார்.
 
அம்பயர் அவுட்டு கொடு… குழந்தை போல் அழுத கிறிஸ் கெயில் – வைரல் வீடியோ

கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் அம்பயர் அவுட் கொடுக்காததால் பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் செய்த செயல் அம்பயரோடு சேர்த்து பலரையும் சிரிக்க வைத்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் தற்போது மெசான்ஸி சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. அப்போது ராக்ஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தது. ஸ்டார்ஸ் அணி சார்பாக கிறிஸ் கெயில் பந்து வீசிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் வீசிய பந்து பேட்ஸ்மேனின் காலிடுக்கில் சென்றது. அதற்கு கெயில் அம்பயரிடம் அவுட் கேட்டு அப்பீல் செய்தார்.

ஆனால், அம்பயர் அவுட் தரவில்லை. அதைக்கண்டு கெயில் குழந்தை போல் அழுது அடம்பிடிப்பது போல் கெயில் ரியாக்‌ஷன் கொடுத்தார். அதைக்கண்டு அம்பயரே சிரித்துக்கொண்டு அவரை நோக்கி நகர்ந்து சென்றார். பலரையும் சிரிக்க வைத்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News