×

இர்பான் பதானை அடுத்து ஹர்பஜன் சிங் – தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் !

தமிழ் சினிமாவில் உருவாகி வரும் இரு திரைப்படங்களில் இந்திய கிரிக்கெட் வீரர்களான இர்பான் பதான் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் ஒப்பந்தமாகியுள்ளனர். இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் சீயான் விக்ரம் தனது 58-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். அடுத்த ஆண்டின் கோடை விடுமுறையை குறி வைத்து தயாராகிவரும் இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அப்படத்தின் இயக்குனர் அஜய்
 
இர்பான் பதானை அடுத்து ஹர்பஜன் சிங் – தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் !

தமிழ் சினிமாவில் உருவாகி வரும் இரு திரைப்படங்களில் இந்திய கிரிக்கெட் வீரர்களான இர்பான் பதான் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் ஒப்பந்தமாகியுள்ளனர்.

இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் சீயான் விக்ரம் தனது 58-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். அடுத்த ஆண்டின் கோடை விடுமுறையை குறி வைத்து தயாராகிவரும் இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.

அதேபோல சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் டிவிட்டர் புகழ் தமிழ்ப் புலவட் ஹர்பஜன் சிங் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இவ்விருவரும் சமீப காலமாக தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதால் சினிமாவில் கால்பதிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News