×

2 வருடத்துக்கு முன்பே எனக்கு அறிவுறுத்தப்பட்டது – ஆட்டநாயகன் ரோஹித் ஷர்மா !

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் நீண்டகாலமாக ஒதுக்கப்பட்டு மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ள ரோஹித் ஷர்மா தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையைப் பற்றி பேசியுள்ளார். லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தனக்கென தனியான முத்திரைப் பதித்த ரோஹித் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இடம்பெற்று தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்து தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். மேலும் இந்தப் போட்டியில் ஆட்டநாயகன்
 
2 வருடத்துக்கு முன்பே எனக்கு அறிவுறுத்தப்பட்டது – ஆட்டநாயகன் ரோஹித் ஷர்மா !

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் நீண்டகாலமாக ஒதுக்கப்பட்டு மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ள ரோஹித் ஷர்மா தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையைப் பற்றி பேசியுள்ளார்.

லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தனக்கென தனியான முத்திரைப் பதித்த ரோஹித் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இடம்பெற்று தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்து தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். மேலும் இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் பெற்றுள்ளார்.

விருது பெற்ற ரோஹித் ‘‘எனக்கு வாய்ப்பளித்த அளித்த அனைவருக்கும் நன்றி. நான் டெஸ்ட்களில் ஆடாத போதும் கூட வலைப்பயிற்சியில் புதிய பந்துகளைத்தான் எதிர்கொண்டு ஆடினேன். எந்த வண்ணப் பந்தானாலும் ஆரம்பத்தில் எச்சரிக்கையாக ஆடவேண்டும். கொஞ்சம் எச்சரிக்கை கொஞ்சம் ஆக்ரோஷம் இதுதான் என் அணுகுமுறை. களத்தில் முழு மகிழ்ச்சியாக விளையாட வேண்டும். நான் டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக இறங்க நேரிடலாம் என சில ஆண்டுகளுக்கு முன்பே அறிவுறுத்தப்பட்டேன்’ எனக் கூறியுள்ளார்

From around the web

Trending Videos

Tamilnadu News