×

கம்பீரின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்ததே நான்தான் ! – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பேட்டி !

உலகின் உயரமான பந்துவீச்சாளர் என்ற பெருமைக்குரிய பாகிஸ்தான் வீரர் முகமது இர்பான் சர்ச்சைக்குரிய சில கருத்துகளைப் பேசியுள்ளார். 7.1 அடி உயரம் உள்ள முகமது இர்பான் பாகிஸ்தான் பவுலர் அவரது உயரத்திற்காக சர்வதேசப் போட்டிகளில் கவனம் பெற்றார். இதுவரைப் பாகிஸ்தான் அணிக்காக 60 ஒருநாள் போட்டிகளிலும், 20 டி 20 போட்டிகளிலும், 4 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இவர் சமீபத்தில் பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ’கவுதம் கம்பீரின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்ததே
 
கம்பீரின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்ததே நான்தான் ! – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பேட்டி !

உலகின் உயரமான பந்துவீச்சாளர் என்ற பெருமைக்குரிய பாகிஸ்தான் வீரர் முகமது இர்பான் சர்ச்சைக்குரிய சில கருத்துகளைப் பேசியுள்ளார்.

7.1 அடி உயரம் உள்ள முகமது இர்பான் பாகிஸ்தான் பவுலர் அவரது உயரத்திற்காக சர்வதேசப் போட்டிகளில் கவனம் பெற்றார். இதுவரைப் பாகிஸ்தான் அணிக்காக 60 ஒருநாள் போட்டிகளிலும், 20 டி 20 போட்டிகளிலும், 4 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இவர் சமீபத்தில் பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ’கவுதம் கம்பீரின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்ததே நான்தான். 2012-ம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடந்த தொடரோடு அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது என்று கூறலாம். அந்தத் தொடரில் அவரை நான் 4 முறை ஆட்டமிழக்க செய்தேன். அந்தத் தொடரின் போது அவர் என் முகத்தையே பார்க்கமாட்டார். இந்த தொடருக்குப் பின் இங்கிலாந்து தொடரில் மட்டும் இந்திய அணியில் கம்பீர் இடம் பெற்றார். அதன் பின் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஒருவகையில் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து வைத்தது நான்தான் எனக் கூறலாம்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News