×

கலக்கிய இஷாந்த் ஷர்மா – இரண்டாம் நாளில் இந்தியா முன்னிலை !

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் சேர்த்துள்ளது. மே.இ.தீவுகளுக்கு எதிரான மூன்று வடிவிலான போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று முன் தினம் நார்த்சவுண்ட் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணியின்
 
கலக்கிய இஷாந்த் ஷர்மா – இரண்டாம் நாளில் இந்தியா முன்னிலை !

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் சேர்த்துள்ளது.

மே.இ.தீவுகளுக்கு எதிரான மூன்று வடிவிலான போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று முன் தினம் நார்த்சவுண்ட் மைதானத்தில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்ற ரஹானே, ஜடேஜா, ராகுல் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய முதல் இன்னிங்ஸில் 298 ரன்களை சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கீமா ரோச் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

அதன் பிறகு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய பவுலர்களின் தாக்கத்தால் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தவண்ணம் இருந்தது. அந்த அணியின் ரோஸ்டன் ச்சேஸ் 48 ரன்களும், ஹெட்மெயிர் 35 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக 2 ஆம் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் 8 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களை சேர்த்தது. இந்திய அணித் தரப்பில் அபாரமாக வீசிய இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்களை வீழ்த்தினார். பூம்ரா,ஷமி மற்றும் ஜடேஜா தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர்.

From around the web

Trending Videos

Tamilnadu News