×

சேஸிங்கில் கிங் என நிரூபித்த கோலி – 207 ரன்களை எளிதாக துரத்திப் பிடித்த இந்தியா !

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி நேற்று ஹைதராபாத்தில் தொடங்கியது. இதில் டாஸில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாண்டனர். எல்வின் லெவிஸ்(40), பிராண்டன் கிங் (31), ஹெட்மெய்ர்(56), கைரன் பொல்லார்டு என
 
சேஸிங்கில் கிங் என நிரூபித்த கோலி – 207 ரன்களை எளிதாக துரத்திப் பிடித்த இந்தியா !

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி நேற்று ஹைதராபாத்தில் தொடங்கியது. இதில் டாஸில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாண்டனர்.

எல்வின் லெவிஸ்(40), பிராண்டன் கிங் (31), ஹெட்மெய்ர்(56), கைரன் பொல்லார்டு என சிறப்ப்பாக ரன்குவிக்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களை சேர்த்தது. இதையடுத்து 208 ரன்கள் என்ற கடின இலக்கோடு களமிறங்கிய இந்தியாவில் ரோஹித் ஷர்மா 8 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன் பின்னர் ராகுலுடன் ஜோடி சேர்ந்த கோலி மெல்ல மெல்ல அதிரடிக்கு மாறினார். சிறப்பாக விளையாடிய ராகுல் 40 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். அதன் பின்னர் வந்த ரிஷப் பண்ட் 9 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்து நடையைக் கட்டினார்.

ஒருமுனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் நங்கூரம் போல நின்ற கேப்டன் கோலி நாலாப்பக்கமும் சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக பறக்கவிட்டார். இதனால் இந்தியாவின் வெற்றி எளிதானது. கடைசி வரை ஆட்டமிழக்காத கோஹ்லி 50 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News