×

மயங்க் அகர்வால் இரட்டை சதம் … அஸ்வின் கம்பேக் பவுலிங் – இரண்டாம் நாளில் இந்தியா ஆதிக்கம் !

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 502 ரன்களுக்கு 7 விக்கெட்களை எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய கிரிக்கெட் அணி உடன் விளையாடி வரும் நிலையில், ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிவடைந்துவிட்டன. அடுத்ததாக டெஸ்ட் தொடர் இன்று விசாகப்பட்டிணத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு
 
மயங்க் அகர்வால் இரட்டை சதம் … அஸ்வின் கம்பேக் பவுலிங் – இரண்டாம் நாளில் இந்தியா ஆதிக்கம் !

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 502 ரன்களுக்கு 7 விக்கெட்களை எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய கிரிக்கெட் அணி உடன் விளையாடி வரும் நிலையில், ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிவடைந்துவிட்டன. அடுத்ததாக டெஸ்ட் தொடர் இன்று விசாகப்பட்டிணத்தில் தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அணியில் ரோஹித் ஷர்மாவும் அஸ்வினும் மற்றும் சாஹாவும் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் பேட்டிங் இறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் மயாங்க் அகர்வால் விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் விளையாடி சதம் அடித்து அசத்தினர்.

இருவரும் முதல் விக்கெட்டுக்கு 317 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக விளையாடிய ரோஹித் 176 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் அவுட் ஆக மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். இந்நிலையில் இந்தியா 502 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்களை இழந்திருந்த போது ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.

அதன் பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் மர்க்ரம் (5), டி பிர்யுன்(4), டேன் பிய்ட்(0) என அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இதனால் இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 39 ரன்களை சேர்த்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அணியில் இடம்பிடித்திருக்கும் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். ஜடேஜா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News