×

இனி இல்லை நோ பால் சர்ச்சை – தனி நடுவர் அறிவித்த பிசிசிஐ !

ஐபிஎல் போட்டிகளில் சரியாக நோபால்களைக் கவனிக்காததால் கடந்த ஆண்டு இரு சர்ச்சைகள் எழுந்தன. மும்பை- பெங்களூர் அணிகளுக்கு எதிரானப் போட்டியில் கடைசி ஓவரில் மலிங்கா வீசிய நோபாலை நடுவர் கவனிக்காமல் விட்டதால் பெங்களூர் அணியின் வெற்றி பறிபோனது. அதேப்போல சிஎஸ்கே போட்டியின் போது இரு நடுவர்களுக்கு இடையிலான நோபால் பற்றிய குழப்பத்தால் சிஎஸ்கே கேப்டன் தோனி களத்திற்குள் சென்று நடுவர்களுடன் விவாதித்தது என சர்ச்சைகள் நடந்தன. இதுபோல தொடர்ச்சியாக நோபால்களால் ஐபிஎல்-ல் சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன.
 
இதையடுத்து இதுபோன்ற பிரச்சனைகளைத் தடுக்கும் பொருட்டில் இந்த ஆண்டு முதல் இனி நோபால்களைக் கவனிக்க மட்டும் தனியாக ஒரு நடுவர் நியமிக்கப்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மற்ற அவுட்களை மேல்முறையீடு செய்யும் நடுவரும் இந்த நடுவரும் வேறு வேறு என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நோ பால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News