×

நோ மோர் விக்கெட் கீப்பர்? இந்திய அணியில் இனி ஒப்புக்குதான் தோனி…

தோனி இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டாலும் அவர் 11 பேர் கொண்ட அணியில் இருக்க மாட்டார் என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனியின் ஓய்வு குறித்து பல செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அடுத்த் நடக்கவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணியில் அவர் இடம் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஆனால், தோனி குறித்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் ரசிகர்களை காயப்படுத்துவதாகவே உள்ளது. இந்நிலையில், தோனி அடுத்து நடக்கவுள்ள வெஸ்ட்
 
நோ மோர் விக்கெட் கீப்பர்? இந்திய அணியில் இனி ஒப்புக்குதான் தோனி…

தோனி இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டாலும் அவர் 11 பேர் கொண்ட அணியில் இருக்க மாட்டார் என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தோனியின் ஓய்வு குறித்து பல செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அடுத்த் நடக்கவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணியில் அவர் இடம் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஆனால், தோனி குறித்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் ரசிகர்களை காயப்படுத்துவதாகவே உள்ளது. இந்நிலையில், தோனி அடுத்து நடக்கவுள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்க மாட்டாராம். அதேபோல் இந்திய அணியின் முதல் விருப்ப விக்கெட் கீப்பராகவும் இனி அவர் தொடர மாட்டாராம்.

அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருப்பார். அதே சமயம் ரிஷப் பந்த் பயிற்சி பெற தோனி உதவுவார். அதாவது தோனி அணியில் இருப்பார். ஆனால் 11 பேர் கொண்ட அணியில் இல்லாமல் 15 பேரில் ஒருவராக இருப்பார். போட்டிகளில் களமிறங்காமல் அணிக்கு வழிகாட்டும் நபராக தொடர்வார் என பிசிசிஐ தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News