×

ஒரே போட்டி… மீண்டும் முதலிடத்தை நெருங்கிய கோஹ்லி – ஸ்மித்தை மிஞ்சுவாரா ?

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இரட்டைசதம் அடித்த இந்திய கேப்டன் கோலி 37 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கும் ஸ்மித்தை நெருங்கியுள்ளார். கடந்த ஒரு வருடகாலமாக ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத நிலையில் கோலி தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தார். அதன் பின் அவர் ஆஷஸ் தொடரில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடியதன் மூலம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார். கடந்த 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சதமடிக்காத கோலி 899 புள்ளிகளோடு இரண்டாம் இடத்துக்கு சென்றார். ஸ்மித் 37 புள்ளிகளோடு
 
ஒரே போட்டி… மீண்டும் முதலிடத்தை நெருங்கிய கோஹ்லி – ஸ்மித்தை மிஞ்சுவாரா ?

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இரட்டைசதம் அடித்த இந்திய கேப்டன் கோலி 37 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கும் ஸ்மித்தை நெருங்கியுள்ளார்.

கடந்த ஒரு வருடகாலமாக ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத நிலையில் கோலி தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தார். அதன் பின் அவர் ஆஷஸ் தொடரில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடியதன் மூலம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார். கடந்த 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சதமடிக்காத  கோலி 899 புள்ளிகளோடு இரண்டாம் இடத்துக்கு சென்றார். ஸ்மித் 37 புள்ளிகளோடு முதலிடத்தில் இருந்தார்.

இந்நிலையில் நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்ததன் மூலம் கோலி ஒரேப் போட்டியில் 37 புள்ளிகள் பெற்று 936 புள்ளிகளோடு ஸ்மித்தை நெருங்கியுள்ளார். மூன்றாவது போட்டியில் கோலி சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவர் ஸ்மித்தை முந்தி முதலிடம் பிடிப்பார்.

From around the web

Trending Videos

Tamilnadu News