×

ஒழுங்காக விளையாடனும் இல்லனா சஞ்சு சாம்ஸனுக்கு வழிவிடனும் – பண்ட்டை எச்சரித்த மூத்த வீரர் !

இந்திய அணி நிர்வாகம் பண்ட்டுக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கிவிட்டதாகவும அதை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் லஷ்மன் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஓய்வு நெருங்கிக் கொண்டிக்குக்கும் வேளையில் அவருக்கு மாற்றான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார் என்பதே பிசிசிஐ முன் தற்போதுள்ள கேள்வி. இந்த கேள்விக்கு ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் என இரு பதில்கள் உள்ளன. ஆனாலும் சஞ்சு சாம்சனை விட ரிஷ்ப் பண்ட்டுக்கு கடந்த ஓராண்டாக அதிக
 
ஒழுங்காக விளையாடனும் இல்லனா சஞ்சு சாம்ஸனுக்கு வழிவிடனும் – பண்ட்டை எச்சரித்த மூத்த வீரர் !

இந்திய அணி நிர்வாகம் பண்ட்டுக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கிவிட்டதாகவும அதை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் லஷ்மன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஓய்வு நெருங்கிக் கொண்டிக்குக்கும் வேளையில் அவருக்கு மாற்றான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார்  என்பதே பிசிசிஐ முன் தற்போதுள்ள கேள்வி. இந்த கேள்விக்கு ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் என இரு பதில்கள் உள்ளன. ஆனாலும் சஞ்சு சாம்சனை விட ரிஷ்ப் பண்ட்டுக்கு கடந்த ஓராண்டாக அதிக வாய்ப்புகளை அணி நிர்வாகம் அள்ளித் தந்தது.

ஆனால் அவர் அதை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது சம்மந்தமாகப் பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் லஷ்மண் ‘மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்ஸன் சேர்க்கப்பட்டு இருப்பது ரிஷப் பந்த்துக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கையாகும்.  ஏனெனில் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளை பண்ட் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனாலும் அவர் அணிக்குள் இருந்தாலே ஒருதுருப்புச் சீட்டுதான் என்பதை மறுப்பதற்கில்லை.

ரிஷப் பந்த் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மோசமான முறையில் ஆட்டமிழந்துள்ளார்.ஆனாலும் அவர்தான் விக்கெட் கீப்பர் தேர்வில் முன்னிலையில் இருக்கிறார். கூடிய சீக்கிரம் அவர் தன்னை நிரூபிக்க வேண்டும் அல்லது சஞ்சு சாம்சனுக்கு வழிவிட வேண்டும்’ எனக் கூறியுள்ளர்.

From around the web

Trending Videos

Tamilnadu News