×

பாலியல் வன்முறைகளுக்கு மன்னிப்பு கோரிய போப்: முதல்முறையாக மக்களுக்கு கடிதம்!

சமீப காலமாக கிறிஸ்தவ பாதிரியார்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. தேவாலயத்தில் பாவ மன்னிப்பு கேட்டு வந்த பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் கத்தோலிக்கப் பாதிரியார்களின் பாலியல் அத்துமீறல்கள் குறித்து போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்தும், மன்னிப்பு கோரியும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதுவரை எந்த போப்பும் மக்களுக்கு கடிதம் எழுதாதவரை, தற்போது வாட்டிகனிலிருந்து முதல்முறையாக போப் மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தேவலாயங்களில் நடைபெறும் பாலியல்
 
பாலியல் வன்முறைகளுக்கு மன்னிப்பு கோரிய போப்: முதல்முறையாக மக்களுக்கு கடிதம்!

சமீப காலமாக கிறிஸ்தவ பாதிரியார்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. தேவாலயத்தில் பாவ மன்னிப்பு கேட்டு வந்த பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் கத்தோலிக்கப் பாதிரியார்களின் பாலியல் அத்துமீறல்கள் குறித்து போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்தும், மன்னிப்பு கோரியும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதுவரை எந்த போப்பும் மக்களுக்கு கடிதம் எழுதாதவரை, தற்போது வாட்டிகனிலிருந்து முதல்முறையாக போப் மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தேவலாயங்களில் நடைபெறும் பாலியல் வன்முறைகள் மறைக்கப்படுவதும், அதற்கு மன்னிப்பு கோராமல் இருப்பதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் வலியை நீண்ட காலமாகக் கண்டுகொள்ளாமல் இருந்தோம். திருச்சபையாக என்ன செய்திருக்க வேண்டுமோ, அதைச் செய்யவில்லை என்பதை வெட்கத்துடன் ஒப்புக்கொள்வோம். பலருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சேதத்தைப் புரிந்துகொண்டு வேகமாக நடவடிக்கை எடுக்காமல் சிறுவர்கள் மீது நாம் அக்கறை காட்டாமல் விட்டுவிட்டோம். நடந்த உண்மைகளை தேவாலயங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.

பாதுகாக்கக்கூடிய இடத்தில் உள்ள நபர்கள் செய்யும் அராஜகங்களை துயரத்துடனும் வெட்கத்துடனும் தேவாலயங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் செய்யும் பாவங்களுக்கும், பிறரின் பாவங்களுக்கும் மன்னிப்பு கோருவோம் என போப் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News