×

ஏமாற்றிய ரோஹித் – இந்தியா நிதானத் தொடக்கம் !

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டயில் டாஸ் வென்ற இந்தியா நிதானமாக விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று புனே நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டு ஹனுமா விஹாரி நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்துக் களமிறங்கிய இந்திய அணியில் கடந்த
 
ஏமாற்றிய ரோஹித் – இந்தியா நிதானத் தொடக்கம் !

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டயில் டாஸ் வென்ற இந்தியா நிதானமாக விளையாடி வருகிறது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று புனே நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டு ஹனுமா விஹாரி நீக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்துக் களமிறங்கிய இந்திய அணியில் கடந்த போட்டியில் இரண்டு சதம் அடித்த ரோஹித் ஷர்மா 14 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றினார். பின்னர் வந்த புஜாராவோடு மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் கூட்டணி அமைத்து நிதானமாக விளையாடி வருகின்றனர். 32 ஓவர்களில் இந்திய அணி 92 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது.

மயங்க் அகர்வால் 45 ரன்களோடும் புஜாரா 27 ரன்களோடும் களத்தில் விளையாடி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News