×

அதகளம் செய்த ரோஹித் ஷர்மா – பங்க்ளாதேஷை ஊதித் தள்ளிய இந்தியா !

பங்க்ளாதேஷுக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது. இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள வங்கதேச அணி இப்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. 3 ஆம் தேதி நடந்த போட்டியில் இந்திய அணி எதிர்பாராத விதமாக தோல்வி அடைந்தது. அதையடுத்து இரண்டாவது போட்டி நேற்று ராஜ்கோட்டில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. களமிறங்கிய பங்களாதேஷ் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்த வண்ணம்
 
அதகளம் செய்த ரோஹித் ஷர்மா – பங்க்ளாதேஷை ஊதித் தள்ளிய இந்தியா !

பங்க்ளாதேஷுக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது.

இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள வங்கதேச அணி இப்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. 3 ஆம் தேதி நடந்த போட்டியில் இந்திய  அணி எதிர்பாராத விதமாக தோல்வி அடைந்தது. அதையடுத்து இரண்டாவது போட்டி நேற்று ராஜ்கோட்டில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

களமிறங்கிய பங்களாதேஷ் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்த வண்ணம் இருந்தது. அந்த அணியின் சவுமியா சர்கார்(30) மற்றும் மகமுதுல்லா (30) ஆகியோர் ஆகியோரின் ஆட்டம் ரன்ரேட்டை உயர்த்தியது. இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது. இந்திய சார்பில் சஹால் அதிகபட்சமாக 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

அடுத்து 154 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். அவருக்கு உறுதுணையாக தவான் செயல்பட்டார். இதனால் ரன்ரேட் 10க்கும் மேல் சென்றது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்தது. தவான் 31 ரன்களில் அவுட் ஆக அடுத்து வந்த ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் ரோஹித் ஷர்மா மட்டும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 43 பந்துகளில் 85 ரன்களை சேர்த்தார். அதில் 6 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும் அடக்கம். இறுதியில் இந்தியா 15.4 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அரைசதம் அடித்த ரோஹித் ஷர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

From around the web

Trending Videos

Tamilnadu News