×

விறுவிறுப்பை இழக்கும் 50 ஓவர் கிரிக்கெட் – சச்சினின் புது யோசனை !

50 ஒவர் போட்டிகளை இரண்டாகப் பிரித்து இரு இன்னிங்ஸ்களாக விளையாடலாம் என சச்சின் யோசனைக் கூறியுள்ளார். 20 ஓவர் போட்டிகள் கிரிக்கெட் உலகில் கோலோச்ச தொடங்கியதை அடுத்து 50 ஓவர் போட்டிகளுக்கான விறுவிறுப்புகள் குறைய தொடங்கியுள்ளது. சில மணி நேரங்களில் முடியும் 20 ஓவர் போட்டிகளை பார்க்கும் அளவுக்கு ரசிகர்கள் நாள் முழுவதும் நடக்கும் 50 ஓவர் போட்டிகளை பார்க்க ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் 50 ஓவர்கள் போட்டிகளை விறுவிறுப்பாக மாற்ற இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின்
 
விறுவிறுப்பை இழக்கும் 50 ஓவர் கிரிக்கெட் – சச்சினின் புது யோசனை !

50 ஒவர் போட்டிகளை இரண்டாகப் பிரித்து இரு இன்னிங்ஸ்களாக விளையாடலாம் என சச்சின் யோசனைக் கூறியுள்ளார்.

20 ஓவர் போட்டிகள் கிரிக்கெட் உலகில் கோலோச்ச தொடங்கியதை அடுத்து 50 ஓவர் போட்டிகளுக்கான விறுவிறுப்புகள் குறைய தொடங்கியுள்ளது. சில மணி நேரங்களில் முடியும் 20 ஓவர் போட்டிகளை பார்க்கும் அளவுக்கு ரசிகர்கள் நாள் முழுவதும் நடக்கும் 50 ஓவர் போட்டிகளை பார்க்க ஆர்வம் காட்டுவதில்லை.

இதனால் 50 ஓவர்கள் போட்டிகளை விறுவிறுப்பாக மாற்ற இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ஒரு யோசனை சொல்லியுள்ளார். அதன் படி 50 ஓவர் கொண்ட போட்டிகளை சரிபாதியாக பிரித்து இரண்டு இன்னிங்க்ஸாக நடத்துவது. 25 ஓவர் என்பதால் முதல் அணி எளிதில் ஆட்டத்தை முடித்து இரண்டாவது அணிக்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரே அடியாக பேட்டிங் அல்லது ஃபீல்டிங் என்று இல்லாமல் இருப்பது கிரிக்கெட் வீரர்களையும் புத்துணர்ச்சியோடு செயல்பட வைக்கும் என தெரிவித்துள்ளார்.

மாறிவரும் காலங்களில் கிரிக்கெட் பல்வேறு விதிகளை தளர்த்தியும் புதிய விதிகளை நுழைத்தும் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதனால் சச்சின் சொல்லும் இந்த புதிய யோசனையும் பரிசீலிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News