×

சானியா மிர்சாவை ஈவ் டீஸிங் செய்த வங்கதேச கிரிக்கெட் வீரர்: கணவர் ஷோயப் மாலிக் பரபரப்பு புகார்!

இந்தியாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கின் மனைவியுமான சானியா மிர்சாவை வாங்கதேச கிரிக்கெட் வீரர் ஷபிர் ரகுமான் ஈவ் டீஸிங் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஷபிர் ரகுமான் அதிரடி ஆட்டத்துக்கு மட்டுமல்லாமல் சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். இவர் சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ரசிகர் ஒருவரை மிரட்டியதற்காக வங்கதேச கிர்க்கெட் வாரியம் இவருக்கு அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட ஆறு மாதம் தடை விதித்திருந்தது. அதுமட்டுமல்லாமல் வங்கதேச பிரீமியர் லீக்கின்போது அனுமதியின்றி பெண்
 
சானியா மிர்சாவை ஈவ் டீஸிங் செய்த வங்கதேச கிரிக்கெட் வீரர்: கணவர் ஷோயப் மாலிக் பரபரப்பு புகார்!

இந்தியாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கின் மனைவியுமான சானியா மிர்சாவை வாங்கதேச கிரிக்கெட் வீரர் ஷபிர் ரகுமான் ஈவ் டீஸிங் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஷபிர் ரகுமான் அதிரடி ஆட்டத்துக்கு மட்டுமல்லாமல் சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். இவர் சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ரசிகர் ஒருவரை மிரட்டியதற்காக வங்கதேச கிர்க்கெட் வாரியம் இவருக்கு அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட ஆறு மாதம் தடை விதித்திருந்தது.

அதுமட்டுமல்லாமல் வங்கதேச பிரீமியர் லீக்கின்போது அனுமதியின்றி பெண் ஒருவரை ஹோட்டலுக்கு அழைத்து சென்றதாக இவர் மீது புகார் எழுந்தது. 2017-ம் ஆண்டு வங்கதேசத்தின் நடைபெற்ற தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர் ஒருவரைத் தாக்கியதாக அவரை 6 மாத காலம் ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கியிருந்தது வங்கதேச கிரிக்கெட் வாரியம்.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக், ஷபிர் ரகுமான் மீது புகார் ஒன்றை அளித்துள்ளதாக வங்கதேச ஊடகங்கள் பரபரப்பு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 4 ஆண்டுகளுக்கு முன்பு வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் ஷோயப் மாலிக் பங்கேற்றபோது அவரது மனைவி சானியாவை ஷபிர் ரகுமான் ஈவ் டீஸிங் செய்ததாக கூறப்பட்டுள்ளது. இதனால் ஷபிர் ரகுமானின் தடைக்காலம் மேலும் நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News