×

அரவிந்த் சாமியுடன் கை கோர்க்கும் சிம்ரன்

புதையல், நான் அவன் இல்லை, பூ வேலி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் செல்வா. நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் இயக்கும் படத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார். மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் தயாரிக்கும் இத்திரைப்படம் சென்ற வாரம் பூஜையுடன் துவங்கியது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை சிம்ரன் போலிஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் தம்பி ராமையா , சாந்தினி ,
 
அரவிந்த் சாமியுடன் கை கோர்க்கும் சிம்ரன்

புதையல், நான் அவன் இல்லை, பூ வேலி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் செல்வா.  நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் இயக்கும் படத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார்.

மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் தயாரிக்கும் இத்திரைப்படம் சென்ற வாரம் பூஜையுடன் துவங்கியது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை சிம்ரன்  போலிஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  மிக முக்கியமான கதாபாத்திரத்தில் தம்பி ராமையா , சாந்தினி , ஹாசினி , ஹரிஷ் உத்தமன் , ராஜ் கபூர் , நாகி நீடு , ரமேஷ் பண்டிட் OAK. சுந்தர் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் தலைப்பு “ வணங்காமுடி “ என அனைவரும் கூறி வருகின்றனர் அது தவறான தகவலாகும். பெயரிடப்படாத இப்படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு தயாரிப்பு தரப்பில் இருந்து மிக விரைவில் வெளிவரும்.

இப்படத்துக்கு கோகுல் ஒளிப்பதிவு செய்ய டி. இமான் இசையமைக்கிறார். படத்தொகுப்பு ஆண்டனி , கலை சிவா யாதவ்

From around the web

Trending Videos

Tamilnadu News