×

ஸ்ரீசாந்த்தின் தண்டனை குறைப்பு – மீண்டும் இந்திய அணியில் ?

சூதாட்டப்புகாரில் சிக்கி வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் தண்டனை 7 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் முக்கியமானவராக திகழ்ந்தவர் ஸ்ரீசாந்த். ஆக்ச்ரோஷமான இவரது ஆட்டம் பெருமளவில் விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இந்தியா சரித்திரம் படைத்த 2007ம் ஆண்டு டி20 உலக கோப்பை போட்டியிலும், 2011ல் இந்தியா 50 ஓவர் உலக கோப்பையிலும் இந்திய அணியில் பங்கேற்றவர். இவர் ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய போது ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக
 

சூதாட்டப்புகாரில் சிக்கி வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் தண்டனை 7 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் முக்கியமானவராக திகழ்ந்தவர் ஸ்ரீசாந்த். ஆக்ச்ரோஷமான இவரது ஆட்டம் பெருமளவில் விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இந்தியா சரித்திரம் படைத்த 2007ம் ஆண்டு டி20 உலக கோப்பை போட்டியிலும், 2011ல் இந்தியா 50 ஓவர் உலக கோப்பையிலும் இந்திய அணியில் பங்கேற்றவர்.

இவர் ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய போது ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை அடுத்து இவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. அந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் முறையிட்டார் ஸ்ரீசாந்த். இதை கடந்த மார்ச் மாதம் விசாரித்த நீதிமன்றம் ஆயுட்கால தடையை ரத்து செய்து ’கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி ஸ்ரீசாந்திடம் மூன்று மாத காலத்திற்குள் விசாரணை மேற்கொண்டு அவரது தண்டனை குறித்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டது.

இதையடுத்து பிசிசிஐ ஒழுங்க நடவடிக்கைக் கமிட்டி ஸ்ரீசாந்தின் தடையை 7 ஆண்டுகளாகக் குறைத்துள்ளது. இதில் 6 ஆண்டுகளை அவர் ஏற்கனவே அறிவித்து விட்டதால் அடுத்த ஆண்டு முதல் அவர் மீதான தடை நீக்கப்படுகிறது. ஆனால் அவருக்கு 36 வயது ஆவதால் அவரால் இனி இந்திய அணியில் இடம்பிடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் அவர் கவனம் செலுத்தலாம் எனத் தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News