×

கோஹ்லியைப் பின்தள்ளி ஸ்டீவ் ஸ்மித் முதலிடம் – தரவரிசையில் ஆஸி வீரர்கள் ஆதிக்கம் !

ஓராண்டாக கிரிக்கெட் விளையாடாமல் தடை செய்யப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் ஆஷஸ் போட்டியில் களமிறங்கினார். இதுவரை 3 டெஸ்ட்களில் விளையாடி 4 சதங்கள் உட்பட 670 ரன்களை சேர்த்து அசத்தியுள்ளார். கடைசியாக அவர் தடை செய்யப்படும் போது தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தார். அதன் பின்னர் இந்திய கேப்டன் கோலி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் இப்போது மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியை ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் முந்தி மீண்டும் முதல் இடத்தைப்
 
கோஹ்லியைப் பின்தள்ளி ஸ்டீவ் ஸ்மித் முதலிடம் – தரவரிசையில் ஆஸி வீரர்கள் ஆதிக்கம் !

ஓராண்டாக கிரிக்கெட் விளையாடாமல் தடை செய்யப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் ஆஷஸ் போட்டியில் களமிறங்கினார். இதுவரை 3 டெஸ்ட்களில் விளையாடி 4 சதங்கள் உட்பட 670 ரன்களை சேர்த்து அசத்தியுள்ளார். கடைசியாக அவர் தடை செய்யப்படும் போது தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தார். அதன் பின்னர் இந்திய கேப்டன் கோலி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் இப்போது மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன்  விராட் கோஹ்லியை  ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் முந்தி மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். ஸ்மித் 937 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்க கோஹ்லி 903 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளார். தடைக்குப் பின் விளையாடிய மூன்றே போட்டிகளில் மீண்டும் தனது முதல் இடத்தைப் பிடித்து ஸ்மித் சாதனை புரிந்துள்ளார். அதற்கடுத்த இடங்களில் கேன் வில்லியம்ஸன், சட்டேஸ்வர் புஜாரா, ஹென்றி நிகோலஸ், ஜோ ரூட், அஜின்கயே ரஹானே, டாம் லாதம், திமுத் கருணாரத்னே, எய்டன் மார்க்ரம் ஆகியோர் உள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸ் 914 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அதற்கடுத்த இடத்தில் ரபாடாவும் மூன்றாம் இடத்தில் பூம்ராவும் உள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News