×

வெஸ்ட் இண்டீஸுக்கு 468 ரன்கள் இலக்கு – வெற்றி விளிம்பில் இந்தியா !

வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்ன்னிங்ஸில் இந்திய அணி 168 ரன்களுக்கு டிக்ளேர் செய்து 468 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதும் பாலோ ஆன் கொடுக்காமல் பேட் செய்த இந்திய அணியில் லோகேஷ் ராகுல் (6), மயங்க் அகர்வால் (4), கோலி (0) மற்றும் புஜாரா (27) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 57 ரன்களுக்கு 4 விக்கெட்களை
 
வெஸ்ட் இண்டீஸுக்கு 468 ரன்கள் இலக்கு – வெற்றி விளிம்பில் இந்தியா !

வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்ன்னிங்ஸில் இந்திய அணி 168 ரன்களுக்கு டிக்ளேர் செய்து 468 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதும் பாலோ ஆன் கொடுக்காமல் பேட் செய்த இந்திய அணியில் லோகேஷ் ராகுல் (6), மயங்க் அகர்வால் (4), கோலி (0) மற்றும் புஜாரா (27) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 57 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரஹானே மற்றும் ஹனுமா விஹாரி ஆகிய இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்ப்பில் ஈடுபட்டனர். இருவரும் அரைசதம் அடித்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் இந்திய அணி 168 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்திருந்தபோது கேப்டன் கோலி டிக்ளேர் செய்தார். ரஹானே 64 ரன்களும் விஹாரி 53 ரன்களும் சேர்த்திருந்தனர்.

இந்நிலையில் முந்தயை இன்னிங்ஸின் 299 ரன்கள் லீடோடு தற்போதைய இன்னிங்ஸின் 168 ரன்களும் சேர்த்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 468 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்ட நேர முடிவில் 45 ரன்கள் சேர்த்து 2 விக்கெட்கள் இழந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News