×

உலககோப்பை கிரிக்கெட் – இந்தியா அதிர்ச்சி தோல்வி

World cup Cricket 2019 – இன்று நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நியூஸ்ஸிலாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய அரையிறுதி போட்டியில் நியூஸ்லாந்து மற்றும் இந்திய அணிகள் விளையாடியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் இந்தியா அடுத்த போட்டிக்கு செல்ல முடியும் என்கிற நிலையில், முதலில் விளையாடிய நியூஸ்லாந்து அணி 239 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடவந்த இந்திய அணியில்
 
உலககோப்பை கிரிக்கெட் – இந்தியா அதிர்ச்சி தோல்வி

World cup Cricket 2019 – இன்று நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நியூஸ்ஸிலாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய அரையிறுதி போட்டியில் நியூஸ்லாந்து மற்றும் இந்திய அணிகள் விளையாடியது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் இந்தியா அடுத்த போட்டிக்கு செல்ல முடியும் என்கிற நிலையில், முதலில் விளையாடிய நியூஸ்லாந்து அணி 239 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடவந்த இந்திய அணியில் 6 விக்கெட்டுகள் மளமளவென சரிய 100 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், இந்தியா தோல்வி அடைந்து விடும் என கிரிக்கெட் ரசிகர்கள் நினைக்க தொடங்கி விட்டனர்.

உலககோப்பை கிரிக்கெட் – இந்தியா அதிர்ச்சி தோல்வி

ஆனால், ஜடேஜாவும், தோனியும் இணைந்து விளையாட்டின் போக்கையே மாற்றிவிட்டனர். ஜடேஜா 52 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றியை நோக்கி எடுத்து சென்றார். எனவே, இந்தியா வெற்றி பெறும் என்கிற நிலை ஏற்பட்டது. ஆனால், கேட்ச் கொடுத்து ஜடேஜா அவுட் ஆகி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் தோனியும் ரன் அவுட் ஆனதால் இந்திய அணி தோல்வியை நோக்கி சென்றது.

இறுதியில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி 49.3 ஓவரில் 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸ்லாந்து அணி வெற்றி பெற்றுவிட்டது. இது இந்திய அணியின் ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்திவிட்டது.

From around the web

Trending Videos

Tamilnadu News