×

எல்லாத்துக்கும் தோனியே காரணம் – யுவராஜ் சிங் தந்தை பகீர் புகார்

World cup 2019 – கிரிக்கெட் போட்டியிலிருந்து யுவராஜ் சிங் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் ஒரங்கட்டப்பட்டதற்கு தோனியே காரணம் என யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் புகார் கூறியுள்ளார். பல போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டதால், இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக யுவராஜ் சிங் கடந்த ஜூன் மாதம் அறிவித்தார். அதேபோல், நடந்து கொண்டிருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதால் ஆத்திரமடைந்த அம்பதி ராயுடுவும் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுவதாக
 
எல்லாத்துக்கும் தோனியே காரணம் – யுவராஜ் சிங் தந்தை பகீர் புகார்

World cup 2019 – கிரிக்கெட் போட்டியிலிருந்து யுவராஜ் சிங் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் ஒரங்கட்டப்பட்டதற்கு தோனியே காரணம் என யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் புகார் கூறியுள்ளார்.

எல்லாத்துக்கும் தோனியே காரணம் – யுவராஜ் சிங் தந்தை பகீர் புகார்

பல போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டதால், இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக யுவராஜ் சிங் கடந்த ஜூன் மாதம் அறிவித்தார். அதேபோல், நடந்து கொண்டிருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதால் ஆத்திரமடைந்த அம்பதி ராயுடுவும் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

எல்லாத்துக்கும் தோனியே காரணம் – யுவராஜ் சிங் தந்தை பகீர் புகார்

உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாட அவர் அழைக்கப்படவில்லை. மாறாக ஷிகர் தவான், விஜய் சங்கர் ஆகியோர் காயமடைந்த போது, அவர்களுக்கு பதிலாக ரிஷப் பண்ட், மயங்க் அகர்வால் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். இதுதான் அம்பதி ராயுடுவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

எல்லாத்துக்கும் தோனியே காரணம் – யுவராஜ் சிங் தந்தை பகீர் புகார்

இந்நிலையில், இது அனைத்திற்கும் தோனியே காரணம் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் குற்றம் சாட்டியுள்ளார். தோனியை தொடர்ந்து விமர்சித்து வரும் அவர் ‘ராயுடு அவசரப்பட்டு தவறான முடிவை எடுத்து விட்டீர்கள். அதை நீங்கள் திரும்பி பெற வேண்டும். தோனி போன்றவர்கள் எப்போதும் நிலைத்திருக்க மாட்டார்கள். இந்த கூட்டத்திற்கு நீங்கள் யார் என்பதை நிரூபிக்க வேண்டும். 2015ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் ராயுடு அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால், ஒரு போட்டியில் கூட அவர் விளையாட தோனி வாய்ப்பு கொடுக்கவில்லை” என அவர் புகார் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News