×

ஓட்டு போட்டா ஹோட்டல் பில்லில் 10 சதவீதம் தள்ளுபடி – அதிரடி அறிவிப்பு

Discount for voters – தேர்தலில் வாக்களிப்பவர்களுக்கு 10 சதவீதம் சலுகை அளிக்கப்படும் என தமிழக ஹோட்டல் சங்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. எல்லோரும் வாக்களிக்க வேண்டும். பணத்துக்காக வாக்களிக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் ஏற்கனவே பிரச்சாரம் செய்து வருகிறது. இந்நிலையில், வாக்கு அளிப்பதை ஊக்குவிப்பதற்காக தமிழக ஹோட்டல் சங்கம் ஒரு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 18ம்
 
ஓட்டு போட்டா ஹோட்டல் பில்லில் 10 சதவீதம் தள்ளுபடி – அதிரடி அறிவிப்பு

Discount for voters – தேர்தலில் வாக்களிப்பவர்களுக்கு 10 சதவீதம் சலுகை அளிக்கப்படும் என தமிழக ஹோட்டல் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. எல்லோரும் வாக்களிக்க வேண்டும். பணத்துக்காக வாக்களிக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் ஏற்கனவே பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்நிலையில், வாக்கு அளிப்பதை ஊக்குவிப்பதற்காக தமிழக ஹோட்டல் சங்கம் ஒரு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 18ம் தேதி வாக்க அளித்தவர்கள் தங்கள் கையில் உள்ள மையை காட்டி ஹோட்டல் தொகையில் 10 சதவீதம் சலுகை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், அந்த தமிழக ஹோட்டல் சங்கத்தின் கீழ் உள்ள ஹோட்டல்களுக்கு மட்டுமே இது பொருந்தும். அந்த வகையில் சரவணபவன், சங்கீதா, ஹாட் சிப்ஸ், வசந்தபவன் உள்ளிட்ட ஹோட்டல்களுக்கு இந்த சலுகை பொருந்தும் எனத் தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News