×

கோவிலுக்கு சென்ற 16 வயது சிறுமி – சீரழித்த ஆட்டோ ஓட்டுனர்கள்

Auto drivers arrest – கோபித்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறி கோவிலுக்கு சென்ற சிறுமியை ஆட்டோ ஓட்டுனர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் விஷ்ணு காஞ்சி பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை காணவில்லை என அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிகிறது. அவரை போலீசார் தேடி வந்த நிலையில், சாலையோரத்தில் ஆடை கிழிந்த நிலையில், உடலில் காயங்களோடு அந்த சிறுமியை போலீசார் மீட்டனர்.
 
கோவிலுக்கு சென்ற 16 வயது சிறுமி – சீரழித்த ஆட்டோ ஓட்டுனர்கள்

Auto drivers arrest – கோபித்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறி கோவிலுக்கு சென்ற சிறுமியை ஆட்டோ ஓட்டுனர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தில் விஷ்ணு காஞ்சி பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை காணவில்லை என அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிகிறது. அவரை போலீசார் தேடி வந்த நிலையில், சாலையோரத்தில் ஆடை கிழிந்த நிலையில், உடலில் காயங்களோடு அந்த சிறுமியை போலீசார் மீட்டனர்.

கோவிலுக்கு சென்ற 16 வயது சிறுமி – சீரழித்த ஆட்டோ ஓட்டுனர்கள்

அரசு மருத்துவமனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. போலீசாரின் விசாரணையில், வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு நான் கோவிலுக்கு சென்ற போது ஆட்டோ ஓட்டுனர் என்னிடம் பேசி, என்னை கோவிலுக்கு அழைத்து செல்வதாக கூறினார். அதன்பின் அவர் எனக்கு ஒரு குளிர்பானம் வாங்கி கொடுத்தார். அதன்பின் என்ன நடந்தது என எனக்கு தெரியாது என அவர் தெரிவித்தார்.

எனவே, குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என கருதிய போலீசார் விசாரணையை துவங்கினார். சிசிடிவி கேமரா மூலம் ஆட்டோ ஓட்டுனர்கள் தேவா, ராஜா, தினேஷ் ஆகிய மூவரும் சேர்ந்து சிறுமியை சீரழித்தது தெரியவந்தது. இதை தேவாவும், ராஜாவும் ஒப்புக்கொண்டனர். தினேஷ் தலைமறைவாகி விட்டார். எனவே, அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News