×

ரூ.200 கோடி ராயல்டி தொகை – இளையராஜா மீது வழக்கு

பாடல்களுக்கான ராயல்டி தொகையில் தங்களுக்கான பங்கை கொடுக்கக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஒரு திரைப்படத்தில் உருவாகும் சினிமா பாடல் தயாரிப்பாளருக்கும், இசையமைப்பாளருக்கும் சொந்தமானது. வியாபாரா ரீதியாக இருவரும் 50 சதவீதம் பங்கை பிரித்துக்கொள்ளவேண்டும். ஆனால், இளையராஜா இசையமைத்த அனைத்து பாடல்களுக்கும் ராயல்டி தொகையை அவரே உரிமை கொண்டாடி வருகிறார். இதனால், தயாரிப்பாளர்களுக்கு வருவாய் கிடைப்பதில்லை எனக்கூரி தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தலைமையில் 6 பேர் கொண்ட குழு இன்று சென்னை
 
ரூ.200 கோடி ராயல்டி தொகை – இளையராஜா மீது வழக்கு

பாடல்களுக்கான ராயல்டி தொகையில் தங்களுக்கான பங்கை கொடுக்கக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஒரு திரைப்படத்தில் உருவாகும் சினிமா பாடல் தயாரிப்பாளருக்கும், இசையமைப்பாளருக்கும் சொந்தமானது. வியாபாரா ரீதியாக இருவரும் 50 சதவீதம் பங்கை பிரித்துக்கொள்ளவேண்டும். ஆனால், இளையராஜா இசையமைத்த அனைத்து பாடல்களுக்கும் ராயல்டி தொகையை அவரே உரிமை கொண்டாடி வருகிறார். இதனால், தயாரிப்பாளர்களுக்கு வருவாய் கிடைப்பதில்லை எனக்கூரி தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தலைமையில் 6 பேர் கொண்ட குழு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அதேபோல், இசை கச்சேரிகளில் வரும் வருமானத்திலும் தயாரிப்பாளர்களுக்கு 50 சதவீதம் தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இளையராஜவின் பரிந்துரைபடி பல தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரிக்கும் படத்தின் ஆடியோ உரிமையை எக்கோ நிறுவனத்துக்கு வழங்கினார். அதில் வரும் ராயல்டி 50 சதவிகித பங்கு இதுவரை தயாரிப்பாளர்களுக்கு செல்லவில்லை. இதுவரை மொத்தம் ரூ.200 கோடி தயாரிப்பாளர்களுக்கு வரவேண்டியுள்ளது என தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News