×

சென்னை உட்பட 21 நகரங்களில் நிலத்தடி நீர் இருக்காது – ஆய்வில் அதிர்ச்சி

Water Issue in Tamilnadu – சென்னை உட்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் அடுத்த ஆண்டு நிலத்தடி நீர் முற்றிலும் இல்லாமல் போகும் என நிதி ஆயோக் அமைப்பின் அறிக்கையில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகமெங்கும் தற்போது தண்ணீர் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக சென்னையில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கே தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். சென்னை சுற்றியுள்ள பல ஏரிகளும் நீரின்றி வரண்டு விட்டதால், சென்னை மக்களுக்கு போதுமான தண்ணீரை அளிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது.
 
சென்னை உட்பட 21 நகரங்களில் நிலத்தடி நீர் இருக்காது – ஆய்வில் அதிர்ச்சி

Water Issue in Tamilnadu – சென்னை உட்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் அடுத்த ஆண்டு நிலத்தடி நீர் முற்றிலும் இல்லாமல் போகும் என நிதி ஆயோக் அமைப்பின் அறிக்கையில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகமெங்கும் தற்போது தண்ணீர் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக சென்னையில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கே தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். சென்னை சுற்றியுள்ள பல ஏரிகளும் நீரின்றி வரண்டு விட்டதால், சென்னை மக்களுக்கு போதுமான தண்ணீரை அளிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது. மழை நீரை அரசு சேமிக்க தவறியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

சென்னை உட்பட 21 நகரங்களில் நிலத்தடி நீர் இருக்காது – ஆய்வில் அதிர்ச்சி

இந்நிலையில், நிதி அயோக் அளித்துள்ள அறிக்கை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

மற்ற நகரங்களை விட சென்னையில் சிறந்த நீர் ஆதாரங்கள் மற்றும் மழைப்பொழிவு இருந்த போதும் நீர் நிலைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு போயுள்ளது.

அடுத்த ஆண்டு சென்னை, பெங்களூர், டெல்லி உட்பட 21 நகரங்களில் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் இல்லாத நிலை ஏற்படும். அதோடு, 2030ம் ஆண்டில் 40 சதவீத மக்களுக்கு குடிநீரே கிடைக்காத நிலை ஏற்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், மழை நீரை சேமிப்பில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும், நீரை சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க அரசும், நாட்டு மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News