×

கள்ளக்காதலுக்கு தடையாக 4 வயது மகன் – தாய் எடுத்த பகீர் முடிவு

Mother killed son – 4 வயது மகனை தாயே கொலை செய்ய திட்டமிட்ட காரணம் தேனி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவரின் மனைவி கீதா. கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கீதாவுக்கு 4 வயதில் ஹரீஷ் என்கிற மகன் இருக்கிறான். இந்நிலையில், கடந்த 14ம் தேதி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஹரீஷை காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவன் கிடைக்காததால் காவல்
 
கள்ளக்காதலுக்கு தடையாக 4 வயது மகன் – தாய் எடுத்த பகீர் முடிவு

Mother killed son – 4 வயது மகனை தாயே கொலை செய்ய திட்டமிட்ட காரணம் தேனி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவரின் மனைவி கீதா. கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கீதாவுக்கு 4 வயதில் ஹரீஷ் என்கிற மகன் இருக்கிறான். இந்நிலையில், கடந்த 14ம் தேதி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஹரீஷை காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவன் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பின் ஊருக்கு ஒதுக்குப்புறமான மயானத்தில் கற்களால் தாக்கப்பட்டு ஹரீஷ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தான். ஆனால், சிறுவன் கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். எனவே, சிறுவனின் தாய் கீதா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன்பின் அவரின் தூண்டுதலிலேயே இந்த கொலை நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கள்ளக்காதலுக்கு தடையாக 4 வயது மகன் – தாய் எடுத்த பகீர் முடிவு

கீதா கணவனை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், அவருக்கு உதயன் என்பவருடன் கள்ள உறவு ஏற்பட்டது. ஆனால், அவரை திருமணம் செய்து கொள்வதற்கு ஹரீஷ் தடையாக இருப்பதாக கீதா அவரின் தங்கை புவனேஸ்வரியிடம் கூறியுள்ளார். புவனேஷ்வரி தனது கணவர் கார்த்தியிடம் இதை கூற, ஹரீஷை கொலை செய்வது என மூவரும் முடிவெடுத்தனர்.

அதன்படி ஊருக்கு ஒதுக்குப்புறவுள்ள இடுகாட்டிற்கு ஹரீஷை கார்த்திக் அழைத்து சென்று கல்லால் அடித்து கொலை செய்துள்ளார். அப்போது யாரேனும் வருகிறார்களா என பார்ப்பதற்காக புவனேஸ்வரி வெளியிலேயே நின்றுள்ளார். ஹரீஷை கார்த்திக் அழைத்து சென்ற சிசிடிவி கேமரா பதிவும் கிடைத்துள்ளது.

தற்போது அனைவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News