×

என்னை தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை: திமுகவுக்கு ஆளுநர் வைத்த செக்!

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் கடந்த ஆண்டு அக்டோபரில் பதவியேற்றார். இதனையடுத்து அவர் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிர எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கோவையில் முதலில் ஆய்வை மேற்கொண்டு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த ஆளுநர் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதித்தார். ஆளுநர் ஆய்வு செய்வது வரம்புமீறிய செயல், சட்டத்திற்கு புறம்பானது என குற்றம் சாட்டினார். ஆனாலும் ஆளுநர் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்து
 
என்னை தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை: திமுகவுக்கு ஆளுநர் வைத்த செக்!

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் கடந்த ஆண்டு அக்டோபரில் பதவியேற்றார். இதனையடுத்து அவர் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிர எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

கோவையில் முதலில் ஆய்வை மேற்கொண்டு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த ஆளுநர் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதித்தார். ஆளுநர் ஆய்வு செய்வது வரம்புமீறிய செயல், சட்டத்திற்கு புறம்பானது என குற்றம் சாட்டினார்.

ஆனாலும் ஆளுநர் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்து வருகிறார். ஆளுநர் ஆய்வுக்கு செல்லும் இடங்களில் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டி வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நாமக்கல்லில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநருக்கு திமுகவினர் கறுப்புக்கொடி காட்டி தீவிரமாக கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 192 பேரை கைது செய்த காவல்துறையினர், நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் ஜூலை 6-ஆம் தேதி வரை அவர்களை நீதிமன்ற காவலில் எடுத்து சேலம் சிறையில் அடைத்துள்ளனர். இதனை கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஒரு மாநிலத்தின் எந்தப் பகுதிக்கும் ஆளுநர் சென்றுவர அதிகாரம் உள்ளது. அரசியலமைப்பு சட்டப்படி செயல்பாட்டுத்துறையின் தலைவரான ஆளுநர், செயல்துறையில் பணியாற்றும் அதிகாரிகளைச் சந்திப்பதில் தவறில்லை. ஆளுநர் ஒருபோதும் அதிகாரிகளுக்கு உத்தரவிடவோ, அரசின் செயல்பாட்டை விமர்சித்ததோ இல்லை.

ஆய்வு எனும் வார்த்தையை எதிர்க்கட்சித் தலைவர் பயன்படுத்துவது மக்களைத் தவறாக வழிநடத்துவதாகும். ஆளுநரின் பணிகளுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது சட்டப்பிரிவு 124-ன் கீழ் வழக்கு தொடர்ந்து 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உண்டு. மக்கள் நலன் கருதி, மாவட்டங்களுக்கு ஆளுநர் செல்வது தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News