×

50க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசம் : 76 வயது முதியவர் கைது

சேலத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி உட்பட பல பெண்களை சீரழித்த 76 வயது முதியவரை போலீஸார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் உடையார்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன். 76 வயதான இவர் வாகன டீலராக இருந்து வந்தார். பணக்காரரான இவருக்கு 30க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. இந்நிலையில் நடராஜன், தன் வீட்டில் பணிபுரிந்து வந்த 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி புகாரளிக்க போலீஸார் நடராஜனை போக்சோ
 
50க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசம் : 76 வயது முதியவர் கைது

சேலத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி உட்பட பல பெண்களை சீரழித்த 76 வயது முதியவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் உடையார்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன். 76 வயதான இவர் வாகன டீலராக இருந்து வந்தார். பணக்காரரான இவருக்கு 30க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன.

இந்நிலையில் நடராஜன், தன் வீட்டில் பணிபுரிந்து வந்த 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி புகாரளிக்க போலீஸார் நடராஜனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதற்கிடையே அந்த மாணவியும் நடராஜனும் உல்லாசமாக இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியானது. இதனைப் பார்த்த போலீஸார், மாணவியின் சம்மதத்துடனே இது நடைபெற்றிருப்பதாக கருதினர். மாணவியை பிடித்து விசாரித்ததில் ஒரு கும்பல் பணம் கொடுத்து நடராஜனிடம் நெருக்கமாக இருக்க சொல்லினர். நானும் அவ்வாறு செய்தேன். அதனை அவர்கள் மறைந்திருந்து போட்டோ எடுத்து நடராஜனை மிரட்டி 25 லட்சம் பணம் கேட்டனர்.

ஆனால் மிரட்டலுக்கு பயப்படாத, நடராஜன் பணத்தை கொடுக்க முடியாது என கூறிவிட்டார். பின்னர் தான் அந்த மாணவி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். கடைசியில் அந்த கும்பல் மாணவியையும், முதியவரையும் போலீசில் சிக்க வைத்துள்ளனர்.

கொடுமை என்னவென்றால் அந்த பெரியவர் இதுவரை 50 க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்துள்ளாராம். அவரிடம் தொடர்ச்சியாக விசாராணை நடைபெற்று வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News