×

பக்கத்து அறையில் தந்தை… 10 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை – பள்ளி தாளாளர் எனும் போர்வையில் காமுகன் !

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கையெழுத்துப் பயிற்சிக்காக சிறப்பு வகுப்புக்கு வந்த மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் குழந்தகளுக்கான கையெழுத்துப் பயிற்சிக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் கலந்துகொள்வதற்காக வேறொரு பள்ளியில் படிக்கும் 10 வயது மாணவி ஒருவரும் தன்னுடைய தந்தையோடு அங்கு வந்துள்ளார். சிறுமியின் தந்தையும் அதே பள்ளியில் நடக்கும் ஜோதிட வகுப்புக்காக வந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவி பள்ளியின் தாளாளர் குருத்திடம் கையெழுத்து வாங்குவதற்காக
 
பக்கத்து அறையில் தந்தை… 10 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை – பள்ளி தாளாளர் எனும் போர்வையில் காமுகன் !

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கையெழுத்துப் பயிற்சிக்காக சிறப்பு வகுப்புக்கு வந்த மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் குழந்தகளுக்கான கையெழுத்துப் பயிற்சிக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் கலந்துகொள்வதற்காக வேறொரு பள்ளியில் படிக்கும் 10 வயது மாணவி ஒருவரும் தன்னுடைய தந்தையோடு அங்கு வந்துள்ளார். சிறுமியின் தந்தையும் அதே பள்ளியில் நடக்கும் ஜோதிட வகுப்புக்காக வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த மாணவி பள்ளியின் தாளாளர் குருத்திடம் கையெழுத்து வாங்குவதற்காக அவரது அறைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் அந்த குழந்தையிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டுள்ளார். இதையடுத்து அந்த மாணவி அலற உடனே அந்த அறைக்கு ஓடியுள்ளார் தந்தை. அப்போது குருத் தன்னை மன்னித்து விடுங்கள் என சொல்லி கெஞ்சியுள்ளார்.

நடந்ததைப் புரிந்துகொண்ட தந்தை உடனடியாக காவல்துறையில் புகாரளிக்க குருத் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து அவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News