×

சாதியின் பெயரை சொல்லி சகமாணவனை பிளேடால் வெட்டிய மாணவன் – பள்ளியில் நடந்த கொடூரம்

மதுரையில் தலித் மாணவனை ஆதிக்க சாதி மாணவன் சாதியின் பெயரை சொல்லி திட்டி பிளேடால் முதுகில் வெட்டிய சமபவம் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் , அலங்காநல்லூர் ஒன்றியம், பாலமேடு அருகே மறவப்பட்டி காலனியை சேர்ந்தவர் மாணவன் சரவணகுமார். இவர் தலித் பிரிவைச் சேர்ந்தவர். இவர் அந்தப் பகுதியில் இருக்கும் பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். 11.10.2019 நேற்று மாலை சரவணக்குமார் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரின் பள்ளி பையை மகா ஈஸ்வரன் என்ற மாணவன்
 
சாதியின் பெயரை சொல்லி சகமாணவனை பிளேடால் வெட்டிய மாணவன் – பள்ளியில் நடந்த கொடூரம்

மதுரையில் தலித் மாணவனை ஆதிக்க சாதி மாணவன் சாதியின் பெயரை சொல்லி திட்டி  பிளேடால் முதுகில் வெட்டிய சமபவம் நடந்துள்ளது.

மதுரை மாவட்டம் , அலங்காநல்லூர் ஒன்றியம், பாலமேடு அருகே மறவப்பட்டி
காலனியை சேர்ந்தவர் மாணவன் சரவணகுமார். இவர் தலித் பிரிவைச் சேர்ந்தவர். இவர் அந்தப் பகுதியில் இருக்கும் பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். 11.10.2019 நேற்று மாலை சரவணக்குமார் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரின் பள்ளி பையை மகா ஈஸ்வரன் என்ற மாணவன் எடுத்து மறைத்து வைத்துக் கொண்டு தேட வைத்துள்ளனர்.

சரவணகுமார் மற்றும் மோகன்ராஜ் பையைக் கொடுக்குமாறு மகேஸ்வரனிடம் கேட்டுள்ளனர், இதனால் ஆத்திரமடைந்த மகா ஈஸ்வரன், சரவணகுமாரை பார்த்து ஏண்டா (சாதிப்பெயரை சொல்லி திட்டி) நீயெல்லாம் என்னை எதிர்த்து பேசுவியா என்று கூறி டப்பாவில் வைத்திருந்தா பிளேடால் சரவணகுமாரின் முதுகில் கிழித்துள்ளான்.

தாக்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். அவரின் முதுகில் காயத்தோடு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு காண்போரின் கண்களைக் கலங்கச் செய்து வருகிறது. தீண்டாமை ஒரு பாவச்செயல் என சொல்லிக்கொடுக்கும் பள்ளிக்கூடங்களே இந்த நிலைமையில் இருப்பது எதிர்காலத் தலைமுறை மீதான அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News