×

ஏசி, கார் இருந்தால் ரேஷன் கார்டு ரத்து – வருகிறது புதிய சட்டம்

Ration Card – ஏசி, கார், சொந்த வீடு உள்ளிட்ட சில வசதிகளை பெற்றிருந்தால் அவர்களுக்கு குடும்ப அட்டையில் உள்ள பல சலுகைகள் ரத்து செய்யப்பட்டும் என அரசு அறிவித்துள்ளது. நடுத்தர மக்கள் மற்றும் வறுமையில் வாடும் மக்களுக்கு கொண்டுவரப்பட்ட திட்டம்தான் குடும்ப அட்டை திட்டம். ஆனால், பெரும் பணக்காரர்களும் ரேஷன் கார்டுகளை வைத்து மானிய விலையில் பொருட்களை வாங்கி வருகின்றனர். இது தொடர்பாக புகார்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே, இது தொடர்பாக தமிழகம் முழுவதும்
 
ஏசி, கார் இருந்தால் ரேஷன் கார்டு ரத்து – வருகிறது புதிய சட்டம்

Ration Card  – ஏசி, கார், சொந்த வீடு உள்ளிட்ட சில வசதிகளை பெற்றிருந்தால் அவர்களுக்கு குடும்ப அட்டையில் உள்ள பல சலுகைகள் ரத்து செய்யப்பட்டும் என அரசு அறிவித்துள்ளது.

நடுத்தர மக்கள் மற்றும் வறுமையில் வாடும் மக்களுக்கு கொண்டுவரப்பட்ட திட்டம்தான் குடும்ப அட்டை திட்டம். ஆனால், பெரும் பணக்காரர்களும் ரேஷன் கார்டுகளை வைத்து மானிய விலையில் பொருட்களை வாங்கி வருகின்றனர். இது தொடர்பாக புகார்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே, இது தொடர்பாக தமிழகம் முழுவதும் ஆய்வு செய்யும் படி அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏசி, கார் இருந்தால் ரேஷன் கார்டு ரத்து – வருகிறது புதிய சட்டம்

அதன்படி முன்னுரிமை பிரிவில் இருந்து நீக்கப்பட வேண்டிய குடும்பங்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

வருமான வரி செலுத்துபவர்… தொழில் வரி செலுத்துபவர்…

5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயி..

மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அல்லது ஓய்வு பெற்ற அதிகாரி..

4 சக்கர வாகனத்தை சொந்த பயன்பாட்டுக்கு வைத்திருப்பவர்…

ஏசி வைத்திருக்கும் குடும்பம்..

மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட கான்கிரீட் வீடுகளை சொந்தமாக கொண்ட குடும்பம்..

வணிக நிறுவனங்களை நடத்தும் குடும்பம்..

அனைத்து ஆதாரங்களில் இருந்தும் பெறப்படும் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கும் மேல் உள்ள குடும்பம்..

இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தாலும், இந்த குடும்பம் மானியம் பெற தகுதியில்லாத குடும்பமாக கணக்கிடப்படுகிறது. இக்குடும்பங்கள் முன்னுரிமை பெற தகுதியுள்ள குடும்ப அட்டைகளை பயன்படுத்தினால் தற்போது அது மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News