×

சுற்றுலாத் தளமாக மாறிய கீழடி – ஆர்வமாக வந்து பார்க்கும் மக்கள் !

கீழடியில் அகழ்வாராய்ச்சி நடந்த இடங்களை அப்பகுதி மக்கள் ஆர்வமாக வந்து பார்த்து செல்ல ஆரம்பித்துள்ளனர். கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் தமிழர்களின் பண்டைய பொருட்களான மண் பானை, முதுமக்கள் தாழி ஆகிய பொருட்கள் கண்டறியப்பட்டன. இது சங்ககால நாகரீகத்துக்கான சான்றாக கருதப்படுகிறது. சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பு, ஹராப்பா மொகஞ்சாதாரோவின் தொடர்ச்சியாக கீழடி நாகரீகம் இருந்துள்ளது என்பதையும் உறுதிபடுத்தியது இந்த அகழாய்வு. அங்கு நடந்த முதல் மூன்று அகழாய்வுப் பணிகளில் 7,818 தொல்பொருட்களும். நான்காம் கட்ட அகழாய்வில் 5,820
 
சுற்றுலாத் தளமாக மாறிய கீழடி – ஆர்வமாக வந்து பார்க்கும் மக்கள் !

கீழடியில் அகழ்வாராய்ச்சி நடந்த இடங்களை அப்பகுதி மக்கள் ஆர்வமாக வந்து பார்த்து செல்ல ஆரம்பித்துள்ளனர்.

கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் தமிழர்களின் பண்டைய பொருட்களான மண் பானை, முதுமக்கள் தாழி ஆகிய பொருட்கள் கண்டறியப்பட்டன. இது சங்ககால நாகரீகத்துக்கான சான்றாக கருதப்படுகிறது. சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பு, ஹராப்பா மொகஞ்சாதாரோவின் தொடர்ச்சியாக கீழடி நாகரீகம் இருந்துள்ளது என்பதையும் உறுதிபடுத்தியது இந்த அகழாய்வு. அங்கு நடந்த முதல் மூன்று அகழாய்வுப் பணிகளில் 7,818 தொல்பொருட்களும். நான்காம் கட்ட அகழாய்வில் 5,820 பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

இதையடுத்து அந்த இடத்தை வரலாற்று ஆய்வாளர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் கீழடிக்கு அப்பகுதி மக்கள் அதிகமாக வர ஆரம்பித்துள்ளனர். மேலும் அந்த இடத்தை சுற்றுலாத் தளமாக மாற்றவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. கீழடியில் நடக்க இருந்த ஐந்தாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் மழைக் காரணமாக தாமதாகியுள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News