×

மாதவிடாயின் போது வலிநிவாரணி மாத்திரைகள் – உழைப்பை சுரண்டும் தொழிற்சாலைகள் !

தமிழகத்தில் இயங்கும் சிலத் தொழிற்சாலைகள் பெண்களுக்கு மாதவிடாயின் போது அனுமதியின்றி வலிநிவாரணி மாத்திரைகளை வழங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாம்ஸன் ராய்ட்ர்ஸ் நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 100 பெண்களிடம் அதிர்ச்சியளிக்கும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. சில தொழிற்சாலைகள் மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு வலி ஏற்பட்டால் விடுப்பு எடுப்பார்கள் என்றும் வேலையில் சுணக்கம் ஏற்படும் என்றும் வலிநிவாரணி மாத்திரைகளை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த மாத்திரைகளைக் கொடுப்பதற்காகவே தனியாக மேலாளர்களை வைத்துள்ளதாகவும் அவர்கள் இந்த மாத்திரைகளின் பெயர்கள் மற்றும்
 
மாதவிடாயின் போது வலிநிவாரணி மாத்திரைகள் – உழைப்பை சுரண்டும் தொழிற்சாலைகள் !

தமிழகத்தில் இயங்கும் சிலத் தொழிற்சாலைகள் பெண்களுக்கு மாதவிடாயின் போது அனுமதியின்றி வலிநிவாரணி மாத்திரைகளை வழங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தாம்ஸன் ராய்ட்ர்ஸ் நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 100 பெண்களிடம் அதிர்ச்சியளிக்கும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. சில தொழிற்சாலைகள் மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு வலி ஏற்பட்டால் விடுப்பு எடுப்பார்கள் என்றும் வேலையில் சுணக்கம் ஏற்படும் என்றும் வலிநிவாரணி மாத்திரைகளை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த மாத்திரைகளைக் கொடுப்பதற்காகவே தனியாக மேலாளர்களை வைத்துள்ளதாகவும் அவர்கள் இந்த மாத்திரைகளின் பெயர்கள் மற்றும் பக்க விளைவுகள் குறித்து சம்மந்தப்பட்ட பெண்களிடம் எதுவும் சொல்வதில்லை என்றும் கூறப்படுகிறது. இதுபோல அங்கீகரிக்கப்படாத மாத்திரைகளை அடிக்கடி உட்கொள்ளும் பல பெண்களும் மன அழுத்தம், பதற்றம், சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றுகள், நீர்த் திசுக் கட்டிகள், கருச்சிதைவு போன்ற நோய்களால் கடுமையாகப் பாதிப்படைகிறார்கள்

இந்த ஆய்வுப் பற்றி பதில் அளித்துள்ள தமிழக அரசு ’உடனடியாக இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்’ எனத் தெரிவித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News