×

ஏ.ஆர். முருகதாஸ் ஏமாற்றிவிட்டார்- நயன்தாரா அதிர்ச்சி புகார்

இயக்குனர் முருகதாஸ் கஜினி படத்தின் போது தனது கதாபாத்திரத்தை சொன்னது போல எடுக்காமல் ஏமாற்றி விட்டதாக நயன்தாரா கூறியுள்ளார். தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குபவராகவும் தனியாக கதாநாயகியாக நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டையும் உருவாக்கி லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக ஊடகங்களை சந்திப்பதை தவிர்த்து வரும் வானொலி ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றை அளித்தார். அப்போது பேசிய அவர் ‘
 
ஏ.ஆர். முருகதாஸ் ஏமாற்றிவிட்டார்- நயன்தாரா அதிர்ச்சி புகார்

இயக்குனர் முருகதாஸ் கஜினி படத்தின் போது தனது கதாபாத்திரத்தை சொன்னது போல எடுக்காமல் ஏமாற்றி விட்டதாக நயன்தாரா கூறியுள்ளார்.

தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குபவராகவும் தனியாக கதாநாயகியாக நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டையும் உருவாக்கி லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.

சமீபகாலமாக ஊடகங்களை சந்திப்பதை தவிர்த்து வரும் வானொலி ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றை அளித்தார். அப்போது பேசிய அவர் ‘ நான் நடித்த படங்களிலெயே மறக்க விரும்புவது கஜினி திரைப்படம்தான். அந்தப்படத்தின் இயக்குனர் என்னிடம் நீங்கள் கதாநாயகியாக நடிக்கீறீர்கள். உங்களோடு இன்னொரு கதாநாயகி நடிக்கிறார் எனக் கூறினார். ஆனால் படம் முடிந்து பார்க்கும்போது அவர் சொன்னது போல எடுக்கவில்லை. அதன் பிறகுதான் நான் கதையை முழுவதும் கேட்டு நடிப்பது என்ற முடிவை எடுத்தேன்.’ எனக் கூறியுள்ளார்.

15 ஆண்டுகளுக்கு பிறகு கஜினி படத்தின் இயக்குனரான முருகதாஸ் தன்னை ஏமாற்றியதாக இப்போது அவர் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடிக்கும் போது நயன்தாரா சொல்லியிருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News