×

மளிகைக் கடைக்காரரோடு வாக்குவாதம் ! – எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல் !

தமிழ் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயமோகன் மீது அவரது சொந்த ஊரான நாகர்கோவிலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன் தமிழில் ஏழாம் உலகம், பின் தொடரும் நிழலின் குரல் போன்ற படைப்புகளின் மூலம் நன்கு பிர்பலமானவர். இப்போது தமிழ் சினிமாவில் வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் வெளியான 2.0 , சர்கார் படங்கள் உள்ளிட்ட பலப் படங்களுக்கு வசனம் எழுதி வருகிறார். தமிழ் இலக்கிய உலகில் சர்ச்சைகளுக்குப் பெயர்போனவர் ஜெயமோகன். இவரின் விமர்சனத்துக்குத் தப்பிய தமிழ் எழுத்தாளர்களே
 
மளிகைக் கடைக்காரரோடு வாக்குவாதம் ! – எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல் !

தமிழ் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயமோகன் மீது அவரது சொந்த ஊரான நாகர்கோவிலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எழுத்தாளர் ஜெயமோகன் தமிழில் ஏழாம் உலகம், பின் தொடரும் நிழலின் குரல் போன்ற படைப்புகளின் மூலம் நன்கு பிர்பலமானவர். இப்போது தமிழ் சினிமாவில் வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் வெளியான 2.0 , சர்கார் படங்கள் உள்ளிட்ட பலப் படங்களுக்கு வசனம் எழுதி வருகிறார்.

தமிழ் இலக்கிய உலகில் சர்ச்சைகளுக்குப் பெயர்போனவர் ஜெயமோகன். இவரின் விமர்சனத்துக்குத் தப்பிய தமிழ் எழுத்தாளர்களே இல்லை என சொல்லலாம். இந்நிலையில் நேற்று இரவு தனது சொந்த ஊரான பார்வதிபுரத்தில் தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடையில் தோசை மாவு வாங்கப்போன இவருக்கும் கடைகாரருக்கும் இடையில் வாக்குவாதம் நடந்துள்ளது. ஒருக்கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே கடைக்காரர் ஜெயமோகனைத் தாக்கியதாக சொல்லப்படுகிறது. தாக்கப்பட்ட ஜெயமோகன் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News