×

கன்னட நடிகர் மீது தாக்குதல் – நடிகர் விமல் விளக்கம்

Actor Vimal : கன்னட நடிகர் எனக்கூறப்படும் நபரை நான் அடிக்கவில்லை என நடிகர் விமல் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு விடுதியில் ஏற்பட்ட கைகலப்பில் நடிகர் விமல் ஒருவரை அடித்துவிட்டதாக செய்திகள் பரவியது. சந்தப்பட்ட நபரும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அது தொடர்பான சிசிடிவி வீடியோவும் வெளியானது. அதைத் தொடர்ந்து அவரை விசாரிக்க போலீசார் சென்றதாகவும், ஆனால், அவர் தலைமறைவாகி விட்டதாகவும் செய்திகள் வெளியனது. இதுபற்றி ஒரு பிரபல வார
 
கன்னட நடிகர் மீது தாக்குதல் – நடிகர் விமல் விளக்கம்

Actor Vimal : கன்னட நடிகர் எனக்கூறப்படும் நபரை நான் அடிக்கவில்லை என நடிகர் விமல் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு விடுதியில் ஏற்பட்ட கைகலப்பில் நடிகர் விமல் ஒருவரை அடித்துவிட்டதாக செய்திகள் பரவியது. சந்தப்பட்ட நபரும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அது தொடர்பான சிசிடிவி வீடியோவும் வெளியானது. அதைத் தொடர்ந்து அவரை விசாரிக்க போலீசார் சென்றதாகவும், ஆனால், அவர் தலைமறைவாகி விட்டதாகவும் செய்திகள் வெளியனது.

இதுபற்றி ஒரு பிரபல வார இதழில் விளக்கம் அளித்துள்ள விமல் “சித்தப்பா தவறியதால் ஊருக்கு சென்றுவிட்டேன். யாரிடம் செல்போனில் பேச முடியவில்லை. சென்னை வந்த இதுபற்றி விளக்கம் அளிக்கலாம் என நினைத்தேன். ஆனால், ஏதேதோ எழுதி விட்டனர். நான் எங்கும் தலைமறைவாக வில்லை.

சம்பந்தப்பட இரவு 11 மணிக்கு என் சித்தப்பா தவறிவிட்டதாய் செய்தி வந்தது. எனவே, என்னுடன் இருந்த என் நண்பரை அந்த விடுதியில் தங்க வைக்க சென்றேன். அந்த ஹிந்தி பேசும் வட மாநில பசங்க வேலை பார்க்கிறார்கள். ஹே கியா பாய்.. ஆபிஸ்ல யாரும் இருக்காங்களான்னு கேட்டேன். உடனே அவர் எமோஷனால் ஆகி ‘என்ன ஏய்னு சொல்ற. நான் என்ன உன் சர்வரா?’ என கோபமாக கேட்டார். நான் அவரை சமாதானம் செய்தேன். ஆனால், திரும்ப திரும்ப அவர் அதையே பேச என்னுடன் இருந்தவர்கள் கொஞ்சம் டென்ஷன் ஆகிவிட்டனர். எனவே, சிறு கைகலப்பு ஆகி விட்டது. அதற்குள் விடுதி மேனேஜர் வந்து விட்டார்.

அந்த நபர் போதையில் இருந்ததாக கூறிவிட்டு, இதை பெரிது படுத்த வேண்டாம் என்றார். நான் உடனே அங்கிருந்து கிளம்பி ஊருக்கு போய் விட்டேன். நான் மது அருந்தவும் இல்லை. ஆனால், அதற்குள் என் மீது புகார் அளித்து விட்டனர். தற்போது ஊரில் இருக்கிறேன். சென்னை வந்ததும் இதுபற்றி விளக்கம் அளிப்பேன்’ என விமல் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News