×

இரவு தாயோடு தூங்கிய குழந்தை…காலையில் பிணமாக கிணற்றில் – அதிர்ச்சியளிக்கும் மர்ம மரணம் !

கோவையில் இரவு தன் தாயோடு தூங்கியக் குழந்தை காலையில் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது. கோவை அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் ஜே சி பி எந்திரங்களை வாடகைக்கு விடும் தொழிலை செய்து வருகிறார். இவரது மனைவி காஞ்சனா. இவர்களுக்கு இரண்டரை வயதில் அமிர்தா எனும் பெண் குழந்தை ஒன்றும் இருந்துள்ளது. நேற்று இரவு தாய் காஞ்சனாவோடு குழந்தை அமிர்தா படுத்துத் தூங்கியுள்ளார். அதிகாலையில் காஞ்சனா எழுந்து பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை. இதனால் பதற்றமானக்
 
இரவு தாயோடு தூங்கிய குழந்தை…காலையில் பிணமாக கிணற்றில் – அதிர்ச்சியளிக்கும் மர்ம மரணம் !

கோவையில் இரவு தன் தாயோடு தூங்கியக் குழந்தை காலையில் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது.

கோவை அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் ஜே சி பி எந்திரங்களை வாடகைக்கு விடும் தொழிலை செய்து வருகிறார். இவரது மனைவி காஞ்சனா. இவர்களுக்கு இரண்டரை வயதில் அமிர்தா எனும் பெண் குழந்தை ஒன்றும் இருந்துள்ளது.

நேற்று இரவு தாய் காஞ்சனாவோடு குழந்தை அமிர்தா படுத்துத் தூங்கியுள்ளார். அதிகாலையில் காஞ்சனா எழுந்து பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை. இதனால் பதற்றமானக் குடும்பத்தார் குழந்தையை ஆளுக்கொரு புறமாகத் தேட வீட்டுக்குப் பின்னால் இருந்த கிணற்றில் பிணமாக மிதந்து கிடந்துள்ளது குழந்தையின் உடல்.

இதனால் அதிர்ச்சியான குழந்தையின் பெற்றோர் சோகத்தில் உறைந்து போக, போலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர். குழந்தையின் மரணம் தொடர்பாக முன்பகை போன்ற எதாவது காரணங்கள் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மர்மமான முறையில் குழந்தை இறந்து போன சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை எழுப்பியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News