×

கெட்ட பெயர் வந்துவிட்டது.. எப்படி சரி கட்டலாம்? – தீவிர ஆலோசனையில் எடப்பாடி

கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் அரசு தரப்பில் நிவாரண பணிகள் முடுக்கிவிடப்படாத விவகாரம் அந்த பகுதி மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டனர். லட்சக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துவிட்டன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளது. இது போக பல விவசாயிகளுக்கு வாழ்வாதாரங்களாக விளங்கிய ஆடு, மாடு, கோழிகள் உயிரிழந்து விட்டன. நெற்பயிர்கள், வாழை, தென்னை மரங்கள்
 
கெட்ட பெயர் வந்துவிட்டது.. எப்படி சரி கட்டலாம்? – தீவிர ஆலோசனையில் எடப்பாடி

கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் அரசு தரப்பில் நிவாரண பணிகள் முடுக்கிவிடப்படாத விவகாரம் அந்த பகுதி மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டனர். லட்சக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துவிட்டன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளது. இது போக பல விவசாயிகளுக்கு வாழ்வாதாரங்களாக விளங்கிய ஆடு, மாடு, கோழிகள் உயிரிழந்து விட்டன. நெற்பயிர்கள், வாழை, தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டன.

தமிழக அரசு தரப்பில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், உயிர் பலிகள் குறைந்தது. ஆனால், புயலால் சேதமடைந்த பகுதிகளுக்கு குடிநீர் உள்ளிட்ட நிவாரண உதவிகள் அரசு தரப்பில் கொண்டு சேர்க்கப்படவில்லை. பாதிப்பு அடைந்து 3 நாட்களுக்கு பின்பே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேதாரங்களை ஆய்வு செய்ய ஹெலிகாப்டரில் சென்றார்.

கெட்ட பெயர் வந்துவிட்டது.. எப்படி சரி கட்டலாம்? – தீவிர ஆலோசனையில் எடப்பாடி

Edapadi palanisamy

ஆனால், புதுக்கோட்டை, தஞ்சை பகுதிகளில் அவர்கள் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய முதல்வர், நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் தன் பயணத்தை பாதியிலேயே முடித்துவிட்டு சென்னை திரும்பினார். டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் ஹெலிகாப்டரை இயக்க முடியாது என்பதால் அவரின் பயணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால், டெல்டா மாவட்டங்களில் மக்கள் கடும் கொந்தளிப்பில் இருப்பதால், அங்கு முதல்வர் சென்றால் மக்களின் கோபத்திற்கு ஆளாகி, அசம்பாவிதம் நடக்க வாய்ப்பிருப்பதாலேயே அங்கு செல்லவில்லை என பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அது மட்டுமில்லாமல், சென்னையில் தற்போது மழை பெய்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே, சென்னை என்ன பாதிப்பை சந்திக்கும் எனத் தெரியாது.

இதுபற்றி ஆலோசனை செய்த முதல்வர், கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் நமக்கு கெட்ட பெயர் வந்துவிட்டது. தற்போது சென்னையிலும் மழை பெய்து வருகிறது. அதிகாரிகள் கவனமாகவும், துரிதமாகவும் செயல்படவேண்டும். யாருக்கும் விடுமுறை கிடையாது. மக்கள் சாலைக்கு வந்து போராடக்கூடாது. அப்படி நடந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தயங்கவே மாட்டேன் எனக் கூறினாராம். இது அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட பீதியிலேயே பணிபுரிந்து வருவதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News