×

16 அடியில் பிரம்மாண்ட ராஜநாகம் – இளைஞரின் துணிச்சல் !

கோவை மாவட்டம் நரசிபுரத்தில் பண்ணை ஒன்றில் இருந்த 16 அடி ராஜநாகத்தை வனத்துறை அதிகாரிகள் இளைஞர் ஒருவரின் துணையோடு பிடித்துள்ளனர். கோவை மாவட்டம் நரசிபுரத்தில் தினேஷ்குமார் என்பவரின் பண்ணை வீடு உள்ளது. அங்கு மிகப்பெரிய ராஜநாகம் ஒன்று பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து வனத்துறையினர் பாம்பாட்டி சந்தோஷ்குமார் என்பவரை அழைத்துக்கொண்டு புறப்பட்டனர். அங்கு அவர்கள் சென்று பார்த்தபோது 16 அடி நீளமிருந்த ராஜநாகத்தைப் பார்த்து வனத்துறை அதிகாரிகளே மிரண்டு போயுள்ளனர். ஆனால் துணிச்சலாக அதைப் பிடித்துக்
 
16 அடியில் பிரம்மாண்ட ராஜநாகம் – இளைஞரின் துணிச்சல் !

கோவை மாவட்டம் நரசிபுரத்தில் பண்ணை ஒன்றில் இருந்த 16 அடி ராஜநாகத்தை வனத்துறை அதிகாரிகள் இளைஞர் ஒருவரின் துணையோடு பிடித்துள்ளனர்.

கோவை மாவட்டம் நரசிபுரத்தில் தினேஷ்குமார் என்பவரின் பண்ணை வீடு உள்ளது. அங்கு மிகப்பெரிய ராஜநாகம் ஒன்று பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து வனத்துறையினர் பாம்பாட்டி சந்தோஷ்குமார் என்பவரை அழைத்துக்கொண்டு புறப்பட்டனர்.

அங்கு அவர்கள் சென்று பார்த்தபோது 16 அடி நீளமிருந்த ராஜநாகத்தைப் பார்த்து வனத்துறை அதிகாரிகளே மிரண்டு போயுள்ளனர். ஆனால் துணிச்சலாக அதைப் பிடித்துக் கொடுத்தார் சந்தோஷ் குமார். அதையடுத்து வனத்துறையினர் அந்த பாம்பை எடுத்துச்சென்று காட்டுப்பகுதியில் விட்டனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News