×

பென்ஸ் கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்த விவகாரம் – அமலா பால் மேல் விரைவில் நடவடிக்கை !

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடிகை அமலாபால் பென்ஸ் எஸ் ரக கார் ஒன்றை 1.12 கோடி ரூபாய்க்கு வாங்கினார். இதனை அவரது கேரள முகவரியில் பதிவு செய்தால் 20 லட்ச ரூபாய் வரி செலுத்த வேண்டும். அந்த தொகையைக் கட்ட மனம் வராத அவர் யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் ஒரு போலியான முகவரிக் கொடுத்து அந்த முகவரியில் பதிவு செய்துகொண்டார். இதனால் அவருக்கு 1.75 லட்ச ரூபாய் மட்டுமே வரியாக வந்தது. இதனால் அவர் 18.25 லட்ச
 
பென்ஸ் கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்த விவகாரம் – அமலா பால் மேல் விரைவில் நடவடிக்கை !

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடிகை அமலாபால் பென்ஸ் எஸ் ரக கார் ஒன்றை 1.12 கோடி ரூபாய்க்கு வாங்கினார். இதனை அவரது கேரள முகவரியில் பதிவு செய்தால் 20 லட்ச ரூபாய் வரி செலுத்த வேண்டும். அந்த தொகையைக் கட்ட மனம் வராத அவர் யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் ஒரு போலியான முகவரிக் கொடுத்து அந்த முகவரியில் பதிவு செய்துகொண்டார். இதனால் அவருக்கு 1.75 லட்ச ரூபாய் மட்டுமே வரியாக வந்தது. இதனால் அவர் 18.25 லட்ச ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாதகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த முறைகேடு அமலாபால் கொடுத்த  முகவரியில் வேறொரு நபர் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதும் அம்பலமானது. இதையடுத்து வரி ஏய்ப்பு செய்ததாக அமலாபால் மேல் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு கடந்த இரண்டு வருடங்களாக நடந்துவருகிறது. இந்நிலையில் கேரள மாநில போக்குவரத்து ஆணையர், புதுச்சேரி சட்டத் துறைக்கு கடிதம் எழுதி ஆலோசனை கேட்டுள்ளார். இதனால் இந்த வழக்கு விரைவாக முடிந்து அமலாபால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News