×

சீட்டுக் கம்பெனி நடத்தி மோசடி- பிக்பாஸ் கவினின் அம்மாவுக்கு 5 ஆண்டு சிறை !

பிக்பாஸ் சீசன் 3 –ல் போட்டியாளராகப் பங்கேற்றிருக்கும் கவினின் அம்மா சீட்டு மோசடி வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ளார். பிக்பாஸ் சீசன் 3-ன் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுவரும் கவின் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் நிலைமையில் அவரது தாய் மற்றும் உறவினர்கள் சிலருக்கு மோசடி வழக்கு ஒன்றில் 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு திருச்சி கவினின்
 
சீட்டுக் கம்பெனி நடத்தி மோசடி- பிக்பாஸ் கவினின் அம்மாவுக்கு 5 ஆண்டு சிறை !

பிக்பாஸ் சீசன் 3 –ல் போட்டியாளராகப் பங்கேற்றிருக்கும் கவினின் அம்மா சீட்டு மோசடி வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3-ன் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுவரும் கவின் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் நிலைமையில் அவரது தாய் மற்றும் உறவினர்கள் சிலருக்கு மோசடி வழக்கு ஒன்றில் 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு திருச்சி கவினின் தாய் ராஜலட்சுமி, சொர்நாதன், அருணகிரிநாதன், தமயேந்தி, ராணி ஆகியோர் இணைந்து சீட்டுக் கம்பெனி நடத்தி மோசடி செய்து ஊரை விட்டு சென்னைக்கு வந்து தலைமறைவாகிவிட்ட்தாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இது சம்மந்தமான வழக்கில் நேற்று தீர்ப்பளித்த திருச்சி குற்றவியல் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தலா 5 ஆண்டு சிறையும் 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு 55 லட்ச ரூபாய் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். அப்படிக் கட்டத் தவறினால் அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News