×

இடைத்தேர்தலில் பாஜக ஆதரவளிக்கும் கட்சி அமோக வெற்றி பெறும் – பொன் ராதாகிருஷ்ணன் விளக்கம் !

இடைத்தேர்தலில் அதிமுக வுக்கு இதுவரை நேரடியாக ஆதரவு தெரிவிக்காத பாஜக, நாங்கள் ஆதரவளிக்கும் கட்சியே வெற்றிபெறும் எனக் கூறியுள்ளார். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த இடைத்தேர்தலை சந்திக்க திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தயாராகி வருகின்றன. இரண்டு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டும் இன்னும் வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளது. இந்நிலையில் அதிமுக வுக்கு அதன் கூட்டணிக்
 
இடைத்தேர்தலில் பாஜக ஆதரவளிக்கும் கட்சி அமோக வெற்றி பெறும் – பொன் ராதாகிருஷ்ணன் விளக்கம் !

இடைத்தேர்தலில் அதிமுக வுக்கு இதுவரை நேரடியாக ஆதரவு தெரிவிக்காத பாஜக, நாங்கள் ஆதரவளிக்கும் கட்சியே வெற்றிபெறும் எனக் கூறியுள்ளார்.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த இடைத்தேர்தலை சந்திக்க திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தயாராகி வருகின்றன. இரண்டு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டும் இன்னும் வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளது.

இந்நிலையில் அதிமுக வுக்கு அதன் கூட்டணிக் கட்சிகளான பாமக மற்றும் தமாக ஆகியவை ஆதரளவு அளித்துவிட்டன. மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்தையும் அமைச்சர்கள் சென்று ஆதரவு பெற்றுள்ளன. இந்நிலையில் மற்றொரு கூட்டணிக் கட்சியான பாஜக மட்டும் எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்காமல் இருந்து வருகிறது. இதற்கு நாங்குநேரி தொகுதியை கேட்டு அதை அதிமுக கொடுக்காததால்தான் எனத் தெரிகிறது.

இந்நிலையில் நேற்று திருச்செந்தூர் கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ‘நாங்குநேரி தொகுதியை இதுவரை பாஜக கேட்கவில்லை. இடைத்தேர்தல் தொடர்பான முடிவுகளை அகில இந்தியத் தலைமைதான் எடுக்கும். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் பாஜக ஆதரவளிக்கும் கட்சி அமோக வெற்றிபெறும்’ எனத் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணிக்குள் இருந்துகொண்டே அவர் இவ்வாறு பேசியிருப்பது சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News