×

14 வயது சிறுமியை சீரழித்த கட்டிடத் தொழிலாளி – போக்ஸோ சட்டத்தில் கைது !

திருப்பூரில் 14 வயது சிறுமி ஒருவரைக் கட்டிடத் தொழிலாளி பாலியல் வல்லுறவு செய்ததை அடுத்து போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அமைந்துள்ள பொட்டிக்காம்பாளையம் அருகே தாய் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு அருகாமையில் சுப்ரமணி என்ற கட்டிட தொழிலாளி ஒருவர் வசித்து வந்துள்ளார். நம்பிக்கைக்கு உரியவராக அவர்களிடம் பழகிய அவர் அந்த தாயிடம் கட்டிடத் தொழிலுக்கு அவர் மகளை அனுப்ப சொல்லியுள்ளார். அவரை நம்பி தனது
 
14 வயது சிறுமியை சீரழித்த கட்டிடத் தொழிலாளி – போக்ஸோ சட்டத்தில் கைது !

திருப்பூரில் 14 வயது சிறுமி ஒருவரைக் கட்டிடத் தொழிலாளி பாலியல் வல்லுறவு செய்ததை அடுத்து போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அமைந்துள்ள பொட்டிக்காம்பாளையம் அருகே தாய் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு அருகாமையில் சுப்ரமணி என்ற கட்டிட தொழிலாளி ஒருவர் வசித்து வந்துள்ளார்.

நம்பிக்கைக்கு உரியவராக அவர்களிடம் பழகிய அவர் அந்த தாயிடம் கட்டிடத் தொழிலுக்கு அவர் மகளை அனுப்ப சொல்லியுள்ளார். அவரை நம்பி தனது மகளைக் கட்டிட வேலைக்கு அனுப்பியுள்ளார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் போலிஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து சிறுமியைத் தேடிய போலிஸார் அவரை திருப்பூர் பேருந்து நிலையத்துக்கு அருகில் கண்டுபிடித்து விசாரணை நடத்தியதை அடுத்து சுப்ரமணி தன்னைப் பாலியல் வல்லுறவு கொண்டதாக சொல்லியுள்ளார். இதையடுத்து சுப்ரமணியைத் தேடி கண்டுபிடித்து அவரைப் போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News