×

ஏடிஎம்-ல் இருந்து வந்த எரிந்து கருகிய பணம் – அதிர்ச்சியான வாடிக்கையாளர் !

கொடநாட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து வெளிவந்த எரிந்த மற்றும் கிழிந்துப்போன நோட்டுகளால் சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தின் சுற்றுலாத் தளங்களில் ஒன்றான கொடநாட்டில் ஏடிஎம் மெஷினில் இருந்து எரிந்துபோன 500 ரூபாய் நோட்டுகள் வெளிவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோத்தகிரி-கொடநாடு நெடுஞ்ச்சாலையில் உள்ள ஈளாடா என்னும் இடத்தில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏ.டி.எம்.கள் உள்ளன. நேற்று 2 கல்லூரி மாணவர்கள் ஏ.டி.எம்.-ல் 5000 ரூபாய் எடுத்தனர். அப்போது எரிந்துப்போன மற்றும் கிழிந்துபோன பல 500 ரூபாய் நோட்டுகள்
 
ஏடிஎம்-ல் இருந்து வந்த எரிந்து கருகிய பணம் – அதிர்ச்சியான வாடிக்கையாளர் !

கொடநாட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து வெளிவந்த எரிந்த மற்றும் கிழிந்துப்போன நோட்டுகளால் சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் சுற்றுலாத் தளங்களில் ஒன்றான கொடநாட்டில் ஏடிஎம் மெஷினில் இருந்து எரிந்துபோன 500 ரூபாய் நோட்டுகள் வெளிவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோத்தகிரி-கொடநாடு நெடுஞ்ச்சாலையில் உள்ள ஈளாடா என்னும் இடத்தில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏ.டி.எம்.கள் உள்ளன. நேற்று 2 கல்லூரி மாணவர்கள் ஏ.டி.எம்.-ல் 5000 ரூபாய் எடுத்தனர். அப்போது எரிந்துப்போன மற்றும் கிழிந்துபோன பல 500 ரூபாய் நோட்டுகள் வெளிவந்துள்ளன.

அதைப்பார்த்து அதிர்ந்த மாணவர்கள் அருகில் இருந்த சம்மந்தப்பட்ட வங்கிக்கு சென்று அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் இதை அலட்சியமாக எடுத்துக்கொண்டுள்ளனர். இதனால் மாணவர்கள் சமூகவலைதளங்களில் இதை பற்றி செய்திகளைப் பகிர்ந்தனர். மேலும் அந்தப் பகுதியில் இதுபோல பலமுறைக் கிழிந்த நோட்டுகள் வந்துள்ளதாகப் பலரும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News