×

திருவாரூரில் இடைதேர்தல் நடத்தலாமா? வேண்டாமா? – இது என்ன புது குழப்பம்?

திருவாரூர் இடைத்தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் இருக்கிறது என்பது பற்றி அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது. கருணாநிதியின் மறைவையடுத்து திருவாரூர் இடைத்தேர்தலில் வருகிற 28ம்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியான திருவாரூரில் தற்போது தேர்தல் நடைபெற்றால் அது நிவாரணப் பணிகளை பாதிக்கும். எனவே, சிறிது காலம் கழித்து அங்கு தேர்தல் நடத்தலாம் என உச்ச நீதிமன்றதில்
 
திருவாரூரில் இடைதேர்தல் நடத்தலாமா? வேண்டாமா? – இது என்ன புது குழப்பம்?

திருவாரூர் இடைத்தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் இருக்கிறது என்பது பற்றி அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது.

கருணாநிதியின் மறைவையடுத்து திருவாரூர் இடைத்தேர்தலில் வருகிற 28ம்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியான திருவாரூரில் தற்போது தேர்தல் நடைபெற்றால் அது நிவாரணப் பணிகளை பாதிக்கும். எனவே, சிறிது காலம் கழித்து அங்கு தேர்தல் நடத்தலாம் என உச்ச நீதிமன்றதில் மனு தொடரப்பட்டுள்ளது. அதேபோல், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்துவது தொடர்பாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்களை நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலாளர் டி.ராஜா சந்தித்து பேசினார்.

எனவே, திருவாரூர் தொகுதியில் தேர்தலை நடத்தலாமா வேண்டமா என்பது பற்றி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும் படி மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் “திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்துக்குட்பட்ட முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளைக்கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, திமுக, அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவரூரில் இடைத்தேர்தல் நடைபெறுமா? இல்லையா என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.

From around the web

Trending Videos

Tamilnadu News